டிசம்பர் 31-ம் தேதிக்குள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இஎம்வி சிப் பொருத்திய டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை வழங்க வேண்டும் என வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

வங்கி டெபிட், கிரெடிட் அட்டைகளின் விவரங்களை திருடி பண மோசடி செய்வதை தடுக்க இஎம்வி சிப் பொருத்திய அட்டைகளை வழங்குமாறு வங்கிகளுக்கு ஏற்கனவே ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியிருந்தது.

இதனையடுத்து இஎம்வி சிப் பொருத்தாத டெபிட் மற்றும் கிரெடிட் அட்டை வைத்துள்ளவர்கள், அதனை வங்கியில் கொடுத்து இஎம்வி சிப் பொருத்திய டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுச்செய்தி அனுப்பி வருகின்றனர்.

இஎம்வி சிப் பொருத்தாத அட்டைகள் டிசம்பர் 31-ம் தேதிக்கு பிறகு முடக்கப்படும் என்றும் வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளைக்கு சென்று இஎம்வி சிப் பொருத்திய அட்டைகளை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.