தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட பல பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த 2019 பிப்ரவரி 24 ஆம் தேதி, பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், மார்ச் 3 ஆம் தேதி, மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்சியர் திருநாவுக்கரசு (26),

அவரது நண்பர்கள் சபரிராஜன் (25), சதீஸ் (29), வசந்தகுமார் (24) ஆகியோரை, கிழக்கு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மணிவண்ணன் (28), கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 354 (ஏ), 354 (பி) உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பாலியல் வழக்கில் கைதானவர்கள், பல இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி, ஆனைமலை அருகே உள்ள பண்ணை வீட்டிற்கு அழைத்து சென்று, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததும், அதை வீடியோ எடுத்து மிரட்டியதும் தெரியவந்தது.

இதுதொடர்பான முதற்கட்ட வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி வந்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, கடந்த ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பொள்ளாட்சி நகர அதிமுக மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹெரான்பால், பாபு என்கின்ற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து பாலியல் வழக்கில் கைதான அருளானந்தம், மைக்பாபு, ஹெரான்பால் ஆகியோருக்கு கோவை அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. பிறகு அவர்கள் மூவரும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கைதான மூவருக்கும் 15 நாட்கள் காவல் விதித்து கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி உத்தரவிட்டார்.

பாலியல் வழக்கில் கைதான பொள்ளாச்சி நகர அதிமுக மாணவர் அணி செயலாளர் அருளானந்தம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அருளானந்தம் நீக்கப்பட்டதாக அதிமுக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தையே பதபதக்க வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான அதிமுக மாணவர் அணி நிர்வாகியுடன் தோளில் கைபோடும் அளவிற்கு பழக்கம் உள்ளவரும், முதல்வர் பழனிசாமியின் தெருக்கமான அதிமுக அமைச்சருமான வேலுமணி மீதும் சிபிஐ விசாரனை பாயுமா என பொள்ளச்சி மக்கள் அன்றி தமிழகம் முழுவதும் மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டிற்கு தடைகோரிய வழக்கு- உயர்நீதிமன்றம் அதிரடி