ஈரோடு அருகே பேருந்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். வெள்ளோடு பகுதியில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் மூலம் பழகி 8-ஆம் வகுப்பு மாணவியை கடத்தி 3 பேர் பாலியல் பலத்தகாரம் செய்தனர்.
 
இது தொடர்பாக விக்னேஷ் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த ராஜபூபதி, ரமேஷ் ஆகியோர் ஆள் கடத்தல் பிரிவில் செய்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இன்னோரு நிகழ்வில்  திருச்செங்கோடு அருகே 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். மல்லசமுத்திரத்தை சேர்ந்த நேதாஜியை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.