இந்திய வீரரை பாகிஸ்தான் விடுவிப்பதாக கூறியுள்ளது மகிழ்ச்சி என முப்படை அதிகாரிகள் ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல், தல்பீர் சிங் கூட்டாக பேட்டிளித்துள்ளனர்.
 
புதன் அன்று காலை இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. அந்த பதில் தாக்குதலில் இந்திய விமானி ஒருவர் தங்கள் வசம் உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது.
 
இதனை தொடர்ந்து சென்னையை சேர்ந்த இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் வசம் இருப்பதை இந்தியாவும் உறுதி செய்தது.
 
மிக் 21 ரக போர் விமானத்தின் சென்ற அபிநந்தனை எல்லை தாண்டி வந்ததாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்களது பாதுகாப்பில் அபிநந்தனை வைத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து வெளியிடப்பட்டது. இதையடுத்தது அபிநந்தனை மீட்கும் நடவடிக்கைகளை இந்தியா சார்பில் எடுக்கப்பட்டு வந்தன.
 
இந்தியாவிற்கான பாகிஸ்தான் துணை தூதரை, நேற்று நேரில் அழைத்து பேசிய நிலையில், இன்று இந்திய விமானி அபிநந்தனை உடனடியாக பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேரில் வலியுறுத்தியுள்ளார்.
 
இதற்கிடையே பாகிஸ்தானில் உள்ள இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் நல்லெண்ண அடிப்படையில் நாளை விடுவிக்கப்படுகிறார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
 
இருநாடுகளிலும் அமைதி நிலவ வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை விடுவிக்க முடிவு எடுத்துள்ளதாகவும், வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் அபிநந்தன் ஒப்படைக்கப்படுவார் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் அறிவித்தார்.
 
மேலும் இந்திய பிரதமர் மோடியுடன் பேசுவேன் என்றும் அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து பிரதமர் இம்ரான் கான் மேலும் தெரிவித்துள்ளதாவது,’அமைதி ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அபிநந்தனை விடுவிக்கிறோம்; பதற்றத்தை அதிகரிப்பது யாருக்கும் பயன்தராது என்றும் கூறினார்.
 
இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் முப்படை அதிகாரிகள் ஆர்.ஜே.கே.கபூர், சுரேந்திர சிங் மெஹல், தல்பீர் சிங் கூட்டாக பேட்டிளித்தனர்.
 
அப்போது, கடந்த 27-ம் தேதி காலை 10 மணியளவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்திய வான் எல்லையில் வந்தன என்றும் பாக் போர் விமானங்களை முறியடிக்க மிக் 21 மற்றும் மிராஜ் 2000 போர் விமானங்கள் சென்று, பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது என விமானப்படை துணை மார்ஷல் ஆர்.ஜி.கபூர் தெரிவித்தார்.
 
மேலும், தவறான பல தகவல்களை பாகிஸ்தான் அளித்துள்ளதாக குற்றசாட்டினார். 2 இந்திய விமானிகளை கைது செய்ததாக பாக். பொய்கூறியது, ஆளில்லா இடங்களில் தான் தாக்குதல் நடத்தியதாக பாக் கூறியது, ஆனால் அவர்கள் இந்திய தளவாடங்களை குறிவைத்து தான் தாக்கியுள்ளனர் என்றார்.
 
பாக். எஃப்-16 ரக விமானத்தை பயன்படுத்தவில்லை என்றும் கூறியது, ஆனால் அதை தான் நாம் சுட்டு வீழ்த்தினோம் என்றார். பாகிஸ்தான் விமானப்படை குண்டுகள் வீசி தாக்கினாலும் இந்தியா தரப்பில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை இந்திய நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதுதான் முப்படை அதிகாரிகளின் நோக்கம் என்றார்.
 
ஆனாலும் இந்திய வீரரை பாகிஸ்தான் விடுவிப்பதாக கூறியுள்ளது மகிழ்ச்சி என்றும் விமானப்படை துணை மார்ஷல் ஆர்.ஜி.கபூர் தெரிவித்துள்ளனர்.
 
நம்முடைய யுத்தம் பயங்கரவாதிகளுக்கு எதிரானது என்றும் இந்திய ராணுவம் முழுமையாக தயார் நிலையில் உள்ளது என்றும் பாகிஸ்தானின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்வோம், அமைதி மற்றும் நிலைத்தன்மையே இந்திய ராணுவத்தின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
 
இந்திய கடற்படை முழு விழிப்புடன் இருக்கிறது என்றார். மேலும், இது தான் இந்தியா சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான் போர் விமானங்களின் பாகங்களையும் செய்தியாளர்களிடம் காண்பித்தனர்.