திருவனந்தபுரம், கவுகாத்தி, அகமதாபாத், லக்னோ, மங்களூரு, ஜெய்ப்பூர் விமான நிலையங்களின் அன்றாட பணிகள் மற்றும் பராமரிப்பு முழுமையாக  அதானி குழுமம் வசம் ஒப்படைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கான முதலீட்டை 100 சதவீதம் தனியார் நிறுவனங்களே செய்யும். அதேசமயம் வருவாயில் குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனங்கள் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு செலுத்தும். அரசு – தனியார் துறை பங்களிப்புடன் விமான நிலைய பராமரிப்பு நடைபெறும் என மத்திய அரசு செய்து வருகிறது.

இதில் 6 விமான நிலையங்களுக்கு ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டன. இதில் 6 விமான நிலையங்களில் 5 விமான நிலையங்களை சாதகமான தொகையை அதானி நிறுவனம் கோரியுள்ளது.

இதன் மூலம் 5 விமான நிலையங்கள் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளது.இதனிடையே திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்க கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் திருவனந்தபுரம் விமான நிலையத்தின் நிர்வாக மற்றும் பராமரிப்பு பணிகளை அதானி நிறுவனத்துக்கு வழங்க கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளாவில் கண்ணூர் மற்றும் கொச்சி விமான நிலையங்களை மேம்படுத்தும் பணிகளை ஏற்கெனவே கேரள அரசு நிறுவனம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

கேரள தொழில் வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இதற்காககவே தனியாக கம்பெனி ஒன்றை உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே திருவனந்தபுரம் விமான நிலையத்தை இந்த நிறுவனத்துக்கு வழங்காமல் தனியார் நிறுவனத்துக்கு வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்திள்ளார்