தமிழகத்தில் திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி அளித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை உடனே ரத்து செய்யும்படி தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளருக்கு, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஜனவரி 5 ஆம் தேதி எழுதிய கடிதத்தில், “மத்திய உள்துறை அமைச்சகம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் திரையரங்குகளில் 50% பார்வையாளர்களை அனுமதிக்கலாம்.

மேலும் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு செயல்படுமாறும் மத்திய உள்துறை செயலாளர் எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக, கடந்த வாரம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திரைப்பட நடிகர் விஜய் சந்தித்துப் பேசினார். அப்போது மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர உள்ள நிலையில், திரையரங்குகளில் சிறப்புக் காட்சிக்கும், 100% பார்வையாளர்களை அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அடுத்த சில தினங்களில் தமிழக அரசு ஜனவரி 4 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை கடைப்பிடிக்கும் அதே சமயம், திரையரங்குகளில் 100% பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அரசின் நடவடிக்கையை எதிர்த்து மருத்துவ வல்லுநர்கள் உள்பட அரசியல் தலைவர்கள் பலரும் போர்க்கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது.

100% திரையரங்குகள் செயல்பட அனுமதித்தது தற்கொலைக்கு சமம்- மருத்துவர்கள்