சென்னை சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் பணிகளை தேசிய நெடுஞ்சலைத்துறை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் “கஜ புயல் ” பேரிடர் உண்டாக்கிய நிலையில் அதன் அழிவுகளை அலுவலர்களை அமர்த்தி தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் 8 வழி சாலைக்கான திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கது .

நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பாணையை முதலில் 57 பக்கம் வரை இந்தியிலும், பிறகு ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டுள்ளது . இதில் மொத்தமாக 251.7 ஏக்கர் பெருவரியான விவசாய நிலங்களை கையகப்படுத்தும் விவரம் உள்ளது. இந்த அறிவிப்பாணையை கண்ட  21 நாட்களுக்குள் தங்கள் தரப்பு எதிர்ப்பை வைக்க வேண்டும் என்ற கட்டிப்பாட்டையும் அரசு வெளியுட்டு உள்ளது . 

தமிழ்நாட்டில் ஹிந்திக்கு முன்னுரிமை கொடுத்து  அறிவித்தது  ஒரு புறம் போராடும் தமிழ் மட்டும் தெரியும் விவசாயிகளை அதிர்ச்சியில் அழ்த்தி உள்ளது.

மேலும் நிலங்களை கையகப்படுத்த ஆட்சேபணைகளை தெரிவிக்கும் நபர்களுக்கு மட்டுமே விளக்கம் அளிக்கப்படும் என்ற ஷரத்தும் அதிர்ச்சியை விவசாயிகளுக்கு பெரும் அயர்ச்சியை எற்படுத்தி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

“அரசிதழ் அறிவிப்பு” காஞ்சிபுரம் மாவட்டத்தில் கையகப்படுத்தப்படவிருக்கும் நிலங்களை பற்றிய குறிப்புகளை கொண்டுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள நில உரிமையாளர்கள் தங்களுடைய ஆட்சேபணைகளை,மாவட்ட வருவாய் அலுவலர், (நிலம் கையகப்படுத்துதல்) தேசிய நெடுஞ்சாலை திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள்எழுத்துபூர்வமாக தெரிவிக்க கேட்டு கொண்டுள்ளது

தேசிய நெடுஞ்சாலையின் அரசிதழ் அறிவிப்பை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் .