தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக 6,785 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழக சுகாதாரத்துறை ஜூலை 24 வெளியிட்ட தகவலில், இன்று ஒரே நாளில் 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் புதிதாக 1,299 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை மொத்தமாக 92,206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,969 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று மேலும் 88 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,320 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்த 88 பேரில், தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 66 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், தமிழகத்தில் உயிரிழப்பு தொடர்ந்து 55-ம் நாளாக இரட்டை இலக்கை எட்டியுள்ளது.

கொரோனா பாதிப்பின் விவரங்கள்: சென்னை – 1299, விருதுநகர் – 424, செங்கல்பட்டு – 419, திருவள்ளூர் – 378, காஞ்சிபுரம் – 349, மதுரை – 326, தூத்துக்குடி – 313, குமரி -266, தேனி -234, ராணிப்பேட்டை – 222, திருச்சி – 217, கோவை – 189, தஞ்சை-186, கள்ளக் குறிச்சி-179, வேலூர் -174, நெல்லை-171 போன்றவை, அதிகம் கொரோனா பரவல் உள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க: ஒரே நாளில் 6,472-ஐ தொட்ட கொரோனா பாதிப்பும்… சமூகப் பரவல் இல்லை எனக் கூறும் தமிழக அரசும்…