சென்னையில் 1130 பேர் உட்பட தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 75 பேர் பலியாகி உள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2626 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 4894 பேர் நோய்த்தொற்று குணமடைந்து வீடு திரும்பியதால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 1,26,670 ஆக உயர்நதுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அரசு பரிசோதனை மையங்கள், தனியார் பரிசோதனை மையங்கள் என மொத்தம் 113 ஆய்வகங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை 20,35,645 மாதிரிகள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்று மட்டும் 51,066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாசிக்க: கொரோனா காலத்தில் எகிறும் மின் கட்டணம்.. போராட்டத்தில் இறங்கிய திமுக..