கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன் மற்றும் மனோஜின் ஜாமினை ரத்து செய்ய கோரிய வழக்கில் வரும் 8ம் தேதி உதகை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
 
டெல்லியில் கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்களுக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டது.
 
இந்நிலையில், முதலமைச்சர் பழனிசாமி மீது கொலை குற்றச்சாட்டுகளை கூறியதால் சயன் மற்றும் மனோஜின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது சயன், மனோஜ் ஆகியோர் உதகை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். சயன், மனோஜ் ஜாமினை ரத்து செய்யகோரிய போலீஸ் மனு விசாரிக்கப்பட்டது.
 
பின்னர் சயன் ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கில் வரும் 8-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் தீடிர் என கோடநாடு ஜெயலலிதா பங்களாவில் என்ன நடந்தது என்ற உண்மையை தெரிவிக்க சயன் விருப்பம் தெரிவித்து நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு புதிய மனுதாக்கல் செய்துள்ளார்.
 
முழு விவரங்களை தெரிவிக்க அனுமதி கேட்டு உதகை கோர்ட்டில் சயன் மனுதாக்கல் செய்துள்ளார். சயனின் ஜாமீனை ரத்து செய்ய போலீஸ் கோரியுள்ள நிலையில் வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
 
சயனுக்கு அனுமதி வழங்கினால் வெளிவராத உண்மைகளை சயன் தெரிவிக்க வாய்ப்பு உள்ளதால் பரபரப்பு எற்ப்பட்டு உள்ளது . இதனால் எடப்பாடி தரப்பு சோகத்துக்கு தாவ தினகரன் மற்றும் ஒபிஎஸ் அணியினர் இனிப்பு கொடுத்து கொண்டாடினார்களாம்