சினிமாவில் தன் வாழ்க்கையை தொடங்கி, அரசியலிலும் நீண்ட காலம் பயணித்தவர் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா. இவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறந்த பின்னர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குனர் பிரியதர்ஷினி “தி அயர்ன் லேடி” என்ற பெயரில் படமாக்கி வருகிறார். ஜெயலலிதா கேரக்டரில் நடிகை நித்யா மேனன் நடித்து வருகிறார்.

அதேபோல் இயக்குனர்கள் பாதிராஜா, ஏ.எல். விஜய் ஆகியோர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க தனித்தனியாக முயற்சி செய்து வருகின்றனர். இதில் ஏ.எல்.விஜய், ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க பாலிவுட் நடிகை வித்யாபாலனை தேர்வு செய்துள்ளதாகவும், மேலும் இயக்குனர் பாரதிராஜா தற்போது ஸ்கிரிப்ட்டை தயார் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில் பாரதிராஜா உள்ளிட்ட 3 இயக்குனர்களுக்கும் முன்பாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்க களம் இறங்கியிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். ஆனால் இவர் இயக்கவுள்ளது வெப் சீரியலாக உருவாகிறது.

இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருக்கிறார். இதில் எம்ஜிஆர், ஷோபன் பாபு உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்கள் இடம் பெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.