நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாக இருந்து வருபவர். விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா சாஷா என்ற மகளும் இருக்கிறார்கள். விஜய் நடித்த ‘வேட்டைக்காரன்’ படத்தில் ஒரு பாடலுக்கு விஜய்யுடன் சேர்ந்து அவரது மகன் சஞ்சய்யும் நடனமாடியிருப்பார்.

இப்படத்தில் முதன் முறையாக தன் மகன் சஞ்சய்யை வெள்ளித்திரையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்தார் விஜய். இதையடுத்து சஞ்சய்க்கு சினிமாவில் ஆர்வம் இருந்ததால் சினிமா சம்பந்தமாக மேல் படிப்பு படிக்க வெளிநாடு சென்றிருந்தார்.

தற்போது நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநர் மற்றும் நடிகராக புது அவதாரம் எடுத்ததுள்ளார். சினிமா சம்பந்தப்பட்ட கல்லூரி படிப்பை முடித்துள்ள சஞ்சய், தன் நண்பர்களுடன் இணைந்து ஒரு குறும்படம் இயக்கியுள்ளார். இந்த குறும்படத்திற்கு “ஜங்சன்” என்று பெயரிடப்பட்டுள்ளனர். 7 நிமிடங்கள் ஓடக்கூடிய இக்குறும்படம் ஒரு கல்லூரியில் நடைபெறும் ராக்கிங் பற்றிய சஸ்பென்ஸ் திரில்லர் கதையாக அமைந்துள்ளது.

தன்னை ராக்கிங் செய்யும் ரோகித் என்பவரை தாக்க முடிவு செய்து செல்கிறார் ஜேசன். ரோகித் வருகைக்காக ஒரு இடத்தில் காத்திருக்கிறார். கையில் கிரிக்கெட் மட்டையுடன் வரும் ரோகித் மீது அந்த வழியாக வந்த கார் மோத ஜேசன் அதிர்ச்சி அடைகிறார். காரில் இருந்து இறங்கிய வாலிபர் கிரிக்கெட் மட்டையையும், ஜேசனையும் மாறி மாறி பார்த்தபோது தாக்கப் போகிறார் என்று நினைத்தால் ஒன்றும் நடக்கவில்லை. ரோகித்தை காப்பாற்றாமல் கிளம்பிச் சென்றுவிடுகிறார்.

அந்த நபர் கிளம்பிய பிறகு ரோகித் அருகே வந்து பார்க்கும் ஜேசன் அதிர்ச்சியில் உறைகிறார். ஜேசன் சஞ்சயின் நண்பர்கள் இருவர் வந்து அவரை அழைத்துக் கொண்டு செல்வது போன்று குறும்படம் முடிகிறது. குறும்படத்தில் தமிழை விட ஆங்கிலத்தில் அதிகமாக பேசுகிறார்கள். இக்குறும்படத்தை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.