சிவகங்கை மாவட்டம், மானாமதுரை தனித் தொகுதி. இந்தத் தொகுதியில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ-வாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மாரியப்பன் கென்னடி.
 
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் பட்டியலில் மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ-வும் ஓருவர் .
 
எனவே இந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில்.,
 
அ.தி.மு.க சார்பில் நாகராஜனும், அ.ம.மு.க சார்பில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ மாரியப்பன் கென்னடியும் ,தி.மு.க சார்பில் இலக்கியதாசனும் களமிறங்கியிருக்கிறார்கள்.
 
இதில் திமுக சார்பில் சாதாரண எளிய தொண்டனை திமுக நிறுத்தி உள்ளது .
 
தன்னுடைய எளிமையான தோற்றம், இயல்பான பேச்சு, பழக்கவழக்கங்கள்தான் தனக்கு வெற்றிக்கு வழிவகுக்கும் என்கிற நம்பிக்கையில் தொகுதிக்குள் வலம்வருகிறார் இலக்கியதாசன்.
 
இதில் முக்கிய விஷய்ம என்னவென்ரால் இந்த மனிதரிடம் இன்னும் செல்பேசி இல்லையாம்
 
கட்சி நிர்வாகிகள் எல்லாம் இவரைத் தொடர்புகொள்ள வேண்டுமானால், அவருடன் இருக்கும் நபருடைய எண்ணிற்குத் தொடர்புகொள்ள வேண்டியதாக இருக்கிறது என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
 
இதுகுறித்து வேட்பாளர் இலக்கியதாசனிடம் சொன்னவை , ‘நான் 1969-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா காலத்திலிருந்து கட்சியில் இருக்கிறேன். எனது குருநாதர் தா.கிருஷ்ணன்.
 
அப்போது இருந்தே நான் எளிமையான வாழ்க்கை வாழ்ந்துவருகிறேன். எனக்கு செல்போன் தேவையில்லை. நான் யார்கூட இருக்கிறேன் என்பது என் மனைவிக்குத் தெரியும்.
 
ஏதாவது பேச வேண்டும் என்றால், அவர்கள் செல்போன் எண்ணிற்கு அழைத்துப் பேசுவார்கள். இப்படித்தான் என் தொலைத்தொடர்புகள் போய்க்கொண்டிருக்கிறது. இனிமேல் இப்படி இருக்க முடியாது. என் கட்சித் தொண்டர்களுக்காகவும், தொகுதி மக்களுக்காகவும் நாளை செல்போன் வாங்க இருக்கிறேன் என்றார்.”
 
இந்த காலத்தில் இப்படி ஒரு வேட்பாளரா என அதிசியமாக கேக்கிறார்கள் அப்பகுதியில் உள்ள வக்காளர்கள்..