10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சென்னை மாதவரம் எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ளார்.
 
சென்னை வில்லிவாக்கம் ஜெகநாதன் தெருவை சேர்ந்தவர் வாசு(56). இவர் சென்னை மாநகர காவல் துறையில் மாதவரம் பால் பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
 
நேற்று இரவு பணி முடிந்து மது போதையில் வீட்டிற்கு வந்தார். வில்லிவாக்கம் ஜெகநாதன் தெருவில் வரும் போது வீட்டின் அருகே 10 வயது சிறுமி தனியாக விளையாடிக் கொண்டிருந்தார்.
 
இதை பார்த்த சிறப்பு உதவி ஆய்வாளர் வாசு, சிறுமியிடம் விளையாடுவது போல் நடித்துள்ளார். பிறகு தெருவில் யாரும் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை அறிந்த வாசு, சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்று ஆடைகளை அகற்றி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.சிறுமி அதிர்ச்சியில் அலறி சத்தம் போட்டும் விடாமல் சிறப்பு உதவி ஆய்வாளர் வாசு சிறுமியின் வாயை பொத்தி பாலியல் தொல்லை கொடுத்ததால் ., 
 
ஒரு கட்டத்தில் சிறுமி வலி தாங்க முடியாமல் கத்தியுள்ளார். சத்தம் கேட்டு அருகில் இருந்த பொது மக்கள் ஓடி வந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு உதவி ஆய்வாளர் வாசுவை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
 
பின்னர் சம்பவம் குறித்து வில்லிவாக்கம் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து சிறப்பு உதவி ஆய்வாளரை மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் கொடுக்க கூடாது என்று சிறப்பு உதவி ஆய்வாளருக்கு ஆதரவாக போலீசாரே அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகார் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
 
அதேநேரம் சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
 
மேலும் பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து கொடுத்ததால் சிறப்பு உதவி ஆய்வாளர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் வாசுவை போக்ஸோ சட்டத்தில் வில்லிவாக்கம் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.