சிபிஐ இயக்குநராக இருந்த அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் நீடித்து வந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் புகார்களை வெளிப்படையாகக் கூறினார்கள். இதனால், பெரும் இக்கட்டான சூழல் ஏற்பட்டதையடுத்து, இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு, புதிய இயக்குநராக நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக நியமித்து உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிராக முன்னாள் இயக்குனர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே கவுல் மற்றும் கே.எம் ஜோசப் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரfக்கப்பட்டது . அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ சிபிஐயின் தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர் ராவ் நியமிக்கப்பட்ட அக்டோபர் 23-ம் தேதி முதல் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் மூடி முத்திரையிடப்பட்ட கவரில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அவர் இதுவரை எடுத்த எந்த முடிவையும் நடைமுறைப்படுத்தக் கூடாது.

அடுத்த விசாரணை நவம்பர் 12-ம் தேதி நடைபெறும். அதுவரை முக்கியமான கொள்கை முடிவு எதையும் நாகேஸ்வர் ராவ் எடுக்கக் கூடாது. சிபிஐ அதிகாரிகள் மீதான முறைகேடு புகார் தொடர்பான விசாரணையை இரண்டு வார காலங்களுக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையம் முடித்துக் கொள்ள வேண்டும். முன்னாள் நீதிபதி பட்நாயக் இந்த விசாரணையைக் கண்காணிப்பார். வழக்கு விசாரணை மீண்டும் நவம்பர் 12-ம் தேதி நடைபெறும்” என உத்தரவிட்டனர்.

ஆனால் 10ஆம் தேதி சனி அன்று தாக்கல் செய்யமால் , திங்கள் அன்று 12 ஆம் தேதி தாக்கல் செய்த போது .,  

சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையைத் தாக்கல் செய்ய ஏன் தாமதம் செய்தீர்கள் என்று மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தை கடிந்த கொண்ட உச்ச நீதிமன்றம் வரும் 16-ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

இந்நிலையில், சிபிஐ அமைப்பின் துணை சட்ட ஆலோசகராக இருக்கும் பீனா ரய்ஜாதா  மீது சிபிஐ 4 பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்துள்ளது.

தமக்கு சாதகமான பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனது வருடாந்திர பணி அறிக்கையில், கிளை தலைவரின் போலியான கையெழுத்துகளை போட்டு மோசடி செய்திருப்பதாக, பீனா ரய்ஜாதா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.