அமைதியான முறையில் போராட்டம் நடத்த இந்திய விவசாயிகளுக்கும் இந்திய மக்களுக்கும் உரிமை உள்ளது. அரசு அவர்களை அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கருத்து தெரிவித்துள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி சலோ என்ற பெயரில் லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை விவசாயிகள், மத்திய அரசுக்கு இடையே 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ள போதிலும், எந்தவிதமான சுமூகமான தீர்வும் எட்டப்படவில்லை.

கடந்த 9 நாட்களாக இந்தியாவின் தலைநகரையே ஸ்தம்பிக்க வைத்துள்ள விவசாயிகள் போராட்டம் குறித்து பல்வேறு உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதற்கு, பிரச்சினையின் சாரத்தை முழுமையாக தெரிந்து கொள்ளாமல், தேவையில்லாமல் கருத்து தெரிவிப்பதாக இந்திய அரசு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் அன்டோனியோ குடெரெஸ் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியாவில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் பற்றிச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

“ஜனநாயக ரீதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்த இந்திய விவசாயிகளுக்கும் இந்திய மக்களுக்கும் உரிமை உள்ளது. அவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களைத் தடுக்காமல் அரசு அதிகாரிகள் அவசியம் அனுமதியளிக்க வேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசின் எதிர்ப்பை புறம் தள்ளிய கனடா பிரதமர்