பாஜக மந்திரி மீது சொல்லப்பட்ட பாலியல் புகார்கள் இந்தி பட உலகையும் பதற வைத்தள்ள நிலையில் பாலியல் புகார்கள் இப்போது தமிழ் திரையுலகையும் தாக்க ஆரம்பித்து உள்ளது.

கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சொல்லி உள்ளார். வைரமுத்து பிற பெண்களிடம் எப்படி தவறாக நடந்துக்கொண்டார் என்பதையும் டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். ஆனால் மறுப்பு தெரிவிக்கும் வகையில் வைரமுத்து விளக்கமளித்தார். ஆனால் வைரமுத்து விளக்கத்தை பார்த்த பாடகி சின்மயி, அவர் ‘பொய்யர்’ என்று பதில் கருத்தை பதிவிட்டார்.

பாடகி சின்மயிக்கு பாஜக ஆர்எஸ்எஸ் அதிமுக தொண்டர்கள் வரிந்து காட்டி கொண்டு ஆதரவாகவும் வைரமுத்துக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவு செய்யப்பட்டு வருகிறது.

நடுநிலையாளர்களே 14 ஆண்டுகள் கழித்து சொல்லப்படும் குற்ற சாட்டு ஒரு புறம் இருந்தாலும் இடைபட்ட காலத்தில் சின்மயியின் அம்மாவும் அவரும் மாற்றி மாற்றி கவிஞர் வைரமுத்துவை புகழ்ந்தது ஏன் என்றும் மேலும் சின்மயி கல்யாணத்துக்கு அழைத்தது மட்டும் இல்லாமல் அவரின் காலில் விழுந்து கும்பிட்டது ஏன் என்றும் கேள்விகள் எழுப்பி உள்ளனர் .

பாஜக தலைவர் தமிழ்சை தங்கள் கட்சி மந்திரி அக்பர் மீதே 10 க்கு மேற்பட்ட பெண்கள் metoo கூறிய நிலையில் அதை பற்றி பேச மறுத்து கவிஞர் வைரமுத்துவை மட்டுமே தாக்குவதில் மகிழ்ச்சியில் உள்ளார் என காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர் .

இந்த நிலையில் பாடகி சின்மயி தனது முகநூல் பக்கத்தில் “கவிஞர் வைரமுத்து என்னிடம் தவறாக நடக்க முயன்றது உண்மை தான். சுரேஷ் வீட்டில் இருந்தவர்களுக்கு இது தெரியும். இவ்வளவு சம்பவத்துக்கு பிறகும் வைரமுத்துவை ஏன் திருமணத்துக்கு அழைத்தீர்கள்? என்று கேட்கிறார்கள். திருமண அழைப்பிதழ்களை கொடுத்த மக்கள் தொடர்பாளர்களிடம் வைரமுத்துவை கூப்பிட இஷ்டமில்லை என்று எப்படி கூற முடியும்.ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் நடக்கின்றன. பெண் குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் பற்றி பேசுகிறோம். ஆனால், ஆண் குழந்தைகளுக்கு நேர்ந்ததை சொல்வது இல்லை.பாலியல் துன்புறுத்தல் செய்பவர்கள் வெட்கப்பட வேண்டும். நான் வெட்கப்பட மாட்டேன். ‘மீ டூ’ மூலம் பாலியல் குற்ற சம்பவங்கள் அதிகம் வெளிவருகின்றன. பாடகிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதை வெளிப்படுத்த அவர்களுக்கு தைரியம் இல்லை. நான் ஒழுங்கான பெண்ணா என்பவர்கள் முதலில் அவர்கள் ஒழுங்கானவர்களா? என்று பார்க்க வேண்டும். என்னை குடும்பத்தினர் பார்த்துக்கொள்வார்கள்.என் துறையில் உள்ள பாலியல் குற்றத்தை வெளியில் கொண்டு வந்ததற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாலியல் புகார்களுக்கு ஆதாரம் கேட்கிறார்கள். அதை எப்படி பெண்களால் தர முடியும். தவறுகளை தெரிவித்தாலோ, தட்டி கேட்டாலோ அந்த பெண்களின் நோக்கம் பற்றி கேள்வி எழுப்புகிறார்கள்”.இவ்வாறு சின்மயி கூறியிருந்தார்.

இந்தநிலையில் இது வரை அமைதி காத்து வந்த கவிஞர் வைரமுத்து இப்போது வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “என் மீதான புகார் உண்மையாக இருந்தால் வழக்கு தொடரலாம். சந்திக்க தயாராக இருக்கிறேன். நான் நல்லவனா? கெட்டவனா? என்பதை இப்போது யாரும் சொல்ல வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன்.சின்மயி வழக்கு தொடர்ந்தால் அதனை சந்திக்க தயார். சின்மயி கூறிய குற்றச்சாட்டு, முழுக்க முழுக்க பொய்யானது. உள்நோக்கமுடையது. பாலியல் புகார் தொடர்பாக மூத்த வழக்கறிஞர்களுடன் கடந்த ஒரு வாரமாக ஆலோசனை நடத்தினேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.”