சேலம் அங்கன்வாடியில் காலியாக உள்ள 1101 சத்துணவு அமைப்பாளர், சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமூக பொதுநலத் துறை (Social Welfare Department) வெளியிடப்பட்டுள்ளது.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

அமைப்பாளர் – 316 இடங்கள்

சம்பளம்: மாதம் ரூ.7700 – 24200

வயதுவரம்பு: 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அமைப்பாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பழங்குடியினர் 8-ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவராக இருக்க வேண்டும்.

பணி: சமையல் உதவியாளர் – 785 இடங்கள்

சம்பளம்: மாதம் ரூ.3000 – 9000

வயதுவரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: சமையல் உதவியாளர் பணிக்கு 5 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம். பழங்குடியினர் எழுத்த, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. மேலும் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர், மூன்றாம் பாலினத்தை சேர்ந்த உரிய சான்றிதழ்கள் பெற்றவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட இரண்டு பணிகளுக்கும் விண்ணப்பிப்போர் நியமன பணியிடத்திற்கும் விண்ணப்பதாரர் குடியிருப்புக்கும் இடையே தூரம் 3 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.10.2018

விண்ணப்பிக்கும் முறை: சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் காலிப்பணியிடங்களுக்கான அலுவலகத்தால் வரையறுக்கப்பட்ட படிவம் அடங்கிய விண்ணப்பங்கள் 15.10.2018 வரை அலுவலக வேலை நேரங்களில் வழங்கப்படும்.

சத்துணவு அமைப்பாளர் / சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் நகல் மாதிரி பற்றி விவரங்கள் தெரிந்து கொள்ள..

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய…