கேரளா பெண்கள்

சபரிமலை பெண்கள் தரிசனம் செய்ய உரிமையுள்ளது பாஜக மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி

சபரிமலை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர், சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது,ஆனால் புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது என்று கூறியுள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17–ந் தேதி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில், அய்யப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் பெண்களை அனுமதிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அங்கு வந்த 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட 12 க்கும் மேற்ப்பட்ட பெண்கள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியும் பெண்கள் உள்ளே செல்ல பலத்த எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. அய்யப்பன் கோவில் நடைமுறைகளிலும், மதநம்பிக்கைகளிலும் கோர்ட்டு தலையிடக்கூடாது என்று, தீர்ப்பை எதிர்ப்பவர்கள் கூறுகிறார்கள். இதற்கிடையே, தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நவம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

இந்நிலையில் சபரிமலை விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி, சபரிமலை விவகாரம் தரிசனம் செய்ய உரிமையுள்ளது, புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது என்று கூறியுள்ளார். மும்பையில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஸ்மிரிதி இரானி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக யாரும் பேசமுடியாது, அமைச்சராக இருக்கும் நானும் பேச முடியாது.

மாதவிடாய் இரத்தத்துடன் சானிட்டரி நாப்கினை உங்களுடைய நண்பரின் வீட்டிற்கு எடுத்து செல்வீர்களா? செல்ல மாட்டீர்கள். நீங்கள் கடவுள் இருக்குமிடத்திற்கு செல்லும்போது அதுபற்றிய கவலையிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைப்பீர்களா? இதுதான் வித்தியாசம். எனக்கு தரிசனம் செய்ய உரிமையுள்ளது, ஆனால் புனிதத்தை கெடுப்பதற்கு கிடையாது. இதுதான் வித்தியாசம், இதனை புரிந்துக் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

Leave a Reply

Your email address will not be published.