நடிகர் விஷால், ராஷி கண்ணா நடிப்பில், வெங்கட் மோகன் இயக்கத்தில் உருவாகிவரும் அயோக்யா படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

‘வீரமாதேவி’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியவர் சன்னி லியோன். இதனைத் தொடர்ந்து மலையாளத்திலும் ‘ரங்கீலா’ எனும் படத்தின் மூலம் அறிமுகமாகினர். இதன் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருக்கிறது.

மேலும், தமிழில் விஷால் நடிக்கும் “அயோக்யா” படத்திலும், மம்முட்டி நடிக்கும் “மதுரராஜா” படத்திலும், ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருக்கிறார்.

சன்னி லியோனுக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒரு முறை கொச்சிக்கு இவர் வந்திருந்த போது இவரைக் காண இவரது ரசிகர்கள் கூட்டம் அலை மோதியதில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்போது மலையாள படத்தில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதை அறிந்த அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.