வெனிசுலாவில் தம்மை தாமே அதிபராக அறிவித்த எதிர்கட்சி தலைவர் பின்னால் அமெரிக்கா தலையிடே காரணம் என மதுரோ புகார்
 
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் எதிர்கட்சி தலைவரும் தம்மை அதிபராக அறிவித்ததால் அரசியல் குழப்பம் நீடிக்கிறது
 
அண்மையில் நடந்து முடிந்த தேர்தலிலும் முறைகேடு நடந்திருப்பதால் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வென்றிருப்பது செல்லாது என்பது எதிர்கட்சி தலைவர் ஜுவுன் கைய்டோவின் குற்றச்சாட்டு.
 
அதே நேரத்தில் அமெரிக்காவின் நேரடி ஆதரவுடன் வெனிசுலாவில் எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் ஆங்காங்கே வன்முறை வெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 
இதனையடுத்து நாட்டில் குழப்பம் விளைவிப்பதாக கூறி அமெரிக்கா உடனான தூதரக உறவை வெனிசுலா முறித்துக் கொண்டுள்ளது.
 
ஆனால் மதுரோ அரசை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்று பதிலடி கொடுத்துள்ள அமெரிக்க எதிர்கட்சி தலைவர் ஜுவுன் கைய்டோவை வெனிசுலா அதிபராக அங்கீகரித்துள்ளது.
 
அத்துடன் வெனிசுலாவில் ஜனநாயகம் மலர மதுரோவை புறக்கணிக்குமாறு உலகநாடுகளை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
 
அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று கனடா, பிரேசில், அர்ஜென்டினா, பெரு, சிலி உள்ளிட்ட நாடுகள் எதிர்கட்சி தலைவர் ஜுவுன் கைய்டோவை அங்கீகரித்துள்ளன.

ஆனால் ரஷ்யா, துருக்கி, மெக்சிகோ, உள்ளிட்ட நாடுகள் மதுரோவை ஆதரிக்கின்றன இதனால் அங்கு அரசியல் சாசன சிக்கல் வெடித்துள்ளது