வெளியில் சோவென கனமழை..
வீட்டுக்குள் நுழைந்த குட்டிக்கொசு குட்டி பையனை கடித்தது..
கோபம் வந்த குட்டி பையன் இரண்டு கை சேர்த்து வேகமுடன் குட்டி கொசுவை அடிக்க..
அடியில் தப்பிய குட்டிக்கொசு இடியென இறங்கிய சத்ததில் மூர்ச்சையாகி தரையில் விழுந்தது..
கீழே விழுந்த குட்டி கொசுவை பார்த்த குட்டி பையன் மகிழ்ச்சியுடன் தன் வீடியோ கேமை தொடர்ந்து அமுக்கிய நேரத்தில்..
வானத்திலிருந்து இறங்கியது பெரும் இடிச்சத்தம்..
சப்தத்தில் பயந்த குட்டி பையன் வீடியோ கேமை தூர எறிந்துவிட்டு..
அம்மா என்று அலறிபடியே அம்மாவை நோக்கி ஓடி அம்மாவின் காலை கட்டி பிடித்து கொண்டான்..
மூர்ச்சையான குட்டி கொசு மயக்கம் தெளிந்து..
ஜன்னல் வழியே பறந்து மழை நீருக்குள் புகுந்து வேகமாக விரைந்தது..
அதன் அம்மா கொசுவை நோக்கி..

https://www.facebook.com/savenra/posts/8064076323618220