சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழனும், சனியும் 397 ஆண்டுகளுக்குப் பின், மிக நெருக்கமாக வரும் அரிய வானியல் நிகழ்வு இன்று (டிசம்பர் 21) நிகழ்ந்தது.

சூரியனை சுற்றிவரும் ஒவ்வொரு கோளும் மற்ற கோளுடன் சில நேரங்களில் ஒரே நேர் கோட்டில் வரும். பூமியில் இருந்து பல கோடி மைல்கள் தொலைவில் இந்த கோள்கள் இருந்தாலும், 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியை நெருங்கி வருகின்றன.

அதிலும் 397 ஆண்டுகளுக்குப் பின் ஒரு பாகைக்கும் குறைவான தூரத்தில் இவ்விரு கோள்களும் நெருங்கி வருவது வானியல் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

இன்று மாலை 5 மணிக்கு துவங்கி மேற்கு திசையில் வியாழனும், சனியும் ஒரே நேர்கோட்டில் நெருங்கின. 2 கோள்களும் ஒன்றையொன்று தொட்டு கொண்டு இருப்பது போன்று பிரகாசமாக காட்சியளித்து நாளை மற்றும் நாளை மறுதினம் ஒன்றிலிருந்து ஒன்று விலகிச் செல்லும்.

17 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர் இந்த 2 கோள்களும் வானில் ஒரே நேர்கோட்டில் தோன்றுகின்றன, இது அரிய நிகழ்வு என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த அரிய நிகழ்வை காண பல்வேறு வானியல் கோளரங்கங்களில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.

சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு நெருங்கிவரும் வியாழனும், சனியும்..