வங்கிகளை தேசியமயமாக்கியது, மன்னர் மானியத்தை ஒழித்தது, உணவுக்கு அமெரிக்காவைச் சார்ந்திருந்த பசியும், பஞ்சமுமான ஒரு தேசத்தைப் பசுமைப் புரட்சியின் மூலம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்தது, துணிச்சலோடும் ராஜதந்திரத்தோடும் பாகிஸ்தானிலிருந்து வங்காள தேசத்தைப் பிரித்துத் தனி நாடாக்கியது, வல்லரசுகளின் கண்ணில் மண்ணைத் தூவிவிட்டு அணுகுண்டு சோதனை நிகழ்த்தியது, நேருவின் தொடர்ச்சியாக விஞ்ஞான, அறிவியல் தொழில்நுட்பத் துறையை வளர்த்தெடுத்தது என்று இந்திராகாந்தியின் செயல்கள்  இந்திய வரலாற்றின் மிகவும் நெருக்கடியான காலகட்டங்களை அசாத்திய துணிச்சலோடு கையாண்டு இந்தியாவை வளர்ச்சியின் பாதையில் அழைத்துச் சென்ற பெருமை அவருக்கு உண்டு.

அவசர நிலைப் பிரகடனம் அவரது வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. ஆனால் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிற நேர்மையும், அவசர நிலைப் பிரகடனத்தை ரத்து செய்துவிட்டு தேர்தலைச் சந்தித்தவர் தான்  இந்திரா காந்தி என்பதும் உண்மை

இந்திராகாந்தியின் வரலாற்றுச் சாதனைகளில் மறக்கபட்ட  முக்கியமான மற்றொன்று மருந்துகள் மீதான இந்திய காப்புரிமைச் சட்டத்தை மாற்றி அமைத்தது. அன்றைய காலகட்டத்தில் ஒரு நாடு மருந்து பொருட்களுக்கு காப்புரிமை பெற்றிருக்கிறது என்றால் மற்ற நாடுகள் அந்த மருந்துகளை தயாரிக்கக் கூடாது என்ற நடைமுறை இருந்தது.

முதல் இந்திய காப்புரிமைச் சட்டம் 1856 ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது, இது 1911 ஆம் ஆண்டில் மிகவும் விரிவான காப்புரிமை மற்றும் வடிவமைப்புச் சட்டமாக மாற்றப்பட்டது. 1911 ஆம் ஆண்டின் சட்டம் மருந்துகள் மற்றும் மருந்துகளுக்கான தயாரிப்பு காப்புரிமைகளுக்கு அனுமதித்தது. அதன் விளைவால் வெளிநாட்டு நிறுவனங்கள் அல்லது எம்.என்.சி-கள் ஒரு முழுமையான ஏகபோகத்தை அனுபவித்து, அதிக விலைகளை வசூலித்தன. முக்கியமாக தங்கள் நாட்டிலிருந்து மருந்துகளை இறக்குமதி செய்து 80% சந்தையை கட்டுப்படுத்தி வந்த எம்.என்.சிக்கள், அதேநேரத்தில் இந்தியாவில் மருந்து உற்பத்தி மையங்களை நிறுவ நிதி முதலீடு மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் முன்வரவில்லை.

1970 களில், சிப்லா என்ற இந்திய மருந்தக நிறுவனம் நியூயார்க்கில் புரூக்ளினில் இருந்து ஒரு அமெரிக்க மருந்து நிறுவனத்தால் காப்புரிமை பெற்ற “ப்ராப்ரா னோலோல்” என்ற மருந்தை தயாரிக்கத் தொடங்கியது, இது இரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி மற்றும் இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தப் பட்டது. இதுகுறித்து அமெரிக்கா இந்திய பிரதமர் இந்திரா காந்தியிடம் புகார் அளித்தது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் மருந்துகளின் அதிக விலைக்கான காரணங்களை ஆராய, 1970 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கண்காணிப்பில், இந்திய காப்புரிமைச் சட்டத்தின் செயல்பாட்டை மறுஆய்வு செய்ய மத்திய அரசின் இடை-மந்திரி குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் அறிக்கையில், ஏகபோக கட்டுப்பாட்டை வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் மருந்துகளின் உற்பத்தியில் பயன்படுத்துவதன் விளைவாக அதிக விலையில் மருந்துகள் விற்கப்பாடுவதாக கூறியது.

இதன் விளைவாக, சிப்லா நிறுவனம் மருந்துப் பொருளை உற்பத்தி செய்வதை நிறுத்த வேண்டும் என்ற அமெரிக்காவின் கட்டளையை நிராகரித்தார் இந்திராகாந்தி. இந்திய மக்களின் நலனைனை கருத்தில் கொண்டு பிரதமர் இந்திராகாந்தி, இந்திய காப்புரிமை சட்டத்தை மாற்றியமைத்தார். 1970 புதிய இந்திய காப்புரிமைச் சட்டம், காப்புரிமையில் மருந்துப் பொருளை சேர்க்கக் கூடாது. ஆனால், அதன் உற்பத்தி செய்யும் செயல்முறையை மட்டுமே வேறு யாரும் காப்புரிமையில் மீறமுடியாது என்று கூறியது.

அதன்படி, தயாரிப்பு உரிமைகோரல் பிரிவில் இருந்து மருந்துகளை விலக்கியது மட்டுமல்லாமல், காப்புரிமையை அதன் வணிக சுரண்டலாக இந்தியாவுக்குள் மறுவரையறை செய்ததுடன், வெளிநாட்டிலிருந்து எந்தவொரு இறக்குமதியையும் விலக்கியது. உயிர்காக்கும் மருந்துகளின் விஷயத்தில் உரிமத்திற்கான தானியங்கி உரிமை போன்ற பாதுகாப்புகளையும் இது அறிமுகப்படுத்தியது. முக்கியமாக, உயிர்காக்கும் மருந்துகள் நியாயமான விலையில் ஏழை, எளிய மக்களுக்கும் கிடைப்பதை உறுதிசெய்தார் இந்திரா காந்தி.

1970 ஆம் ஆண்டின் காப்புரிமை சட்டம் பல வளரும் நாடுகளால் பாராட்டப்பட்டது மற்றும் கண்டுபிடிப்பாளர் மற்றும் நுகர்வோர் இருவரின் நலனையும் சீரான முறையில் பாதுகாக்கும் மிகவும் முற்போக்கான சட்டங்களில் ஒன்றாக  இது விளங்குவதாக  வர்த்தக மற்றும் மேம்பாட்டுக்கான ஐக்கிய நாடுகளின் மாநாடு  பாராட்டியதும் குறிப்பிடதக்கது.

[su_quote]இதுகுறித்து மே 8, 1981 அன்று, ஜெனீவாவில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் உரையாற்றிய மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, “வசதியுள்ள சமூகங்கள் துன்பத்தைத் தணிப்பதற்கும் ஆயுளை நீடிப்பதற்கும் புதிய தயாரிப்புகள் மற்றும் செயல்முறைகளைத் தேடுவதில் ஏராளமான பணத்தை செலவிடுகின்றன. இந்த செயல்பாட்டில், மருந்து உற்பத்தி ஒரு சக்திவாய்ந்த தொழிலாக மாறியுள்ளது. ஒரு சிறந்த ஒழுங்குபடுத்தப்பட்ட உலகத்தைப் பற்றிய எனது யோசனை, அதில் மருத்துவ கண்டுபிடிப்புகள் காப்புரிமையற்றதாக இருக்கும், மேலும் வாழ்க்கையிலிருந்தோ அல்லது மரணத்திலிருந்தோ லாபம் ஈட்டாது” என்றார்.[/su_quote]

இந்தியா சில மருந்துகளை ஏற்றுமதி செய்ய தடைவிதித்த காலத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை தராவிட்டால் அதன் விளைவுகளை சந்திப்பீர்கள் என்று டிரம்ப் மிரட்டியதும், அடுத்த நாளே அந்த மருந்திற்கான ஏற்றுமதி தடையை நீக்கியது பற்று நாம் அனைவரும் அறிந்ததே..

இன்று ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை வைத்து அரசியல் லாபம் ஈட்டும் ஆளும் கட்சி அரசியல்வாதிகள் சிலர் மறந்து அல்லது மறைத்து விட்ட உண்மை வரலாறு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்ய காரணம், பாஜக அரசு  எப்போதும் குறை கூறி கூறும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் போது தான் என அறிந்திராத உண்மை இப்போது தான் பலருக்கும்  புலப்பட தொடங்கி உள்ளது அதற்காகவே  ஆளும்  பாஜக கட்சிக்கு காங்கிராசார்  நன்றி சொல்ல வேண்டும்  என்கிறார் ஸ்பெல்கோ  சமூகதள செய்தி நிறுவனத்தின் எடிட்டர் சவெரா