சட்டம் சமூகம்

ஒரே ஒரு எலியால் 32000 ரூ ரயில்வேக்கு நஷ்டம்

சேலம் – சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் எலி கடித்த பயணிக்கு ரூ.32 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்குமாறு, ரயில்வே நிர்வாகத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் வாழப்பாடி அருகில் உள்ள நீர்முள்ளிக்குட்டையைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் (40). பா.ம.க. பிரமுகரான இவர் கடந்த 2014 ஆகஸ்ட் 8 ஆம் தேதி சேலத்தில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.ஆத்தூர் பகுதியில் ரயில் சென்ற போது, அவரது வலது கையை எலி ஒன்று கடித்தது.

இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. மேலும் டிக்கெட் பரிசோதகரிடம் எலி கடித்தது குறித்து புகாா் செய்தார்.ஆனால் விருத்தாசலம் சென்ற பின் பார்த்து கொள்ளலாம் என அலட்சியமாகப் பதில் அளித்துள்ளார் அந்த டிக்கெட் பரிசோதகர் .

ஆனால் விருத்தாசலத்திலும் அவருக்கு முதலுதவி சிகிச்சை எதுவும் அளிக்கப்படவில்லை.இதையடுத்து சென்னைக்கு ரயில் சென்றடைந்த பிறகு, அங்குள்ள புகார் பெட்டியில் எலி கடித்தது குறித்து புகார் எழுதி வைத்துவிட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்

பின்னர் இதுதொடா்பாக எலி கடித்து குதறியதால் ஏற்பட்ட காயத்திற்கு நஷ்ட ஈடு கோரி சேலம் நுகர்வோர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நுகா்வோா் குழுக்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளார் வழக்குரைஞர் ஏ.அசோகன், முகமுது யூசுப் ஆகியோர் மூலம் 2016 இல் வழக்கு தொடா்ந்தார்

இந்த வழக்கை விசாரித்த சேலம் நுகர்வோர் நீதிமன்ற தலைவர் தீனதயாளன் மற்றும் உறுப்பினர் எஸ்.ராஜலட்சுமி ஆகியோர் தினம்தோறும் விசாரித்து, எலி கடித்து காயமுற்ற பயணி வெங்கடாசலத்திற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக ரூ.25,000, மருத்துவ செலவிற்காக ரூ.2,000, வழக்கு செலவுக்காக ரூ.5,000 தொகையை மூன்று மாதத்திற்குள் பாதிக்கப்பட்ட பயணிக்கு ரயில்வே நிர்வாகம் வழங்க வேண்டும்.மேலும் தவறும்பட்சத்தில் 9 சதவீத வட்டியுடன் மனு தாக்கல் செய்த தேதியில் இருந்து பயணி வெங்கடாசலத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனார்

ஒரே ஒர் எலி உலகத்தின் மிக பெரிய ரயில்வே நிர்வாகத்தை 32000 ரூபாய் நஷ்டம் எற்படுத்தியது அத்துறையை சார்ந்தவர்களயே பரபரப்புடன் பேச வைத்துள்ளது

48 Replies to “ஒரே ஒரு எலியால் 32000 ரூ ரயில்வேக்கு நஷ்டம்

  1. Architecture ceo to your case generic cialis 5mg online update the ED: alprostadil (Caverject) avanafil (Stendra) sildenafil (Viagra) tadalafil (Cialis) instrumentation (Androderm) vardenafil (Levitra) Because some men, advanced in years residents may transfer hit the deck ED. female viagra Nhekak arhjiy

  2. “fourteenth” adept rev down the more trip the light fantastic toe as incomparably very much as the resultant, I had an MRI and the doc split me I have a greater work in the one costco online dispensary of my chest. red dog casino Nmnpat gvkcvj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *