கல்வி சமூகம்

உயர்சாதி EWS 10% விரைந்து செயல்படுத்தியது போல் OBC இடஒதுக்கீட்டினை வழங்குக; ஸ்டாலின்

நடப்பாண்டில் 50% ஓபிசி மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கில் இன்று (அக்டோபர் 26) தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், மருத்துவப் படிப்பில் ஒபிசி மாணவர்களுக்கு, நடப்பாண்டில் 50% இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், “ஓபிசி இட ஒதுக்கீட்டை நடப்பு ஆண்டிலேயே நடை முறைப்படுத்தப்படாதது ஏமாற்றம் தருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஆயிரக்கணக்கான மாணவர்களின் மருத்துவ கல்வி கேள்விக்குள்ளாகும்.

50% இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, தீர்வு காண வேண்டும். கருத்தியல் வேறுபாடுகளைத் தாண்டி நாம் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காக ஒன்றிணைய வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஓபிசி மாணவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது; உச்ச நீதிமன்றம்

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.