சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலையில் 2 பெண்கள் தரிசனம் செய்த சம்பவம் சரித்திர நிகழ்வை ஏற்படுத்தியுள்ளது.
 
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு சென்று வழிபடலாம் என உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தும் கூட பிற்போக்கு ஹிந்துவ சக்த்திகள் மூலம் போராட்டங்கள் நடைபெற்றதால் பெண்கள் செல்ல முடியாமல் இருந்து வந்த சூழ்நிலையில் இன்று காலை 2 பெண்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை வழிபாடு செய்தது பெரும் சரித்திர நிகழ்வாக கருதப்படுகிறது.
கேரள மாநிலம் மலாபுரத்தை சேர்ந்த கனகதுர்கா, கோழிக்கோடை சேர்ந்த பிந்து, ஆகிய 40 வயது பெண்கள் இருவரும் சபரிமலைக்கு இன்று அதிகாலையில் சன்னிதானத்திற்கு இருமுடி கட்டி சென்றனர். இருப்பினும் 2 பேரும் 18 படிகள் ஏறாமல் அதிகாலை 3.45 மணிக்கு சாமி தரிசனம் செய்தனர்.
 
முன்னதாக தரிசனம் செய்த இரண்டு பெண்களும் கடந்த மாதம் 18ம் தேதி சபரிமலைக்கு தரிசனம் மேற்கொள்ள சென்றனர் ஆனால் ஆர்எஸ்எஸ் பிற்போக்கு ஹிந்துவ சக்த்திகள் மூலம் போராட்டங்கள் நடைபெற்றதால் தரிசனம் செய்யாமல் திரும்பினார்.
 
இந்த நிலையில் நேற்று இரவு நிலக்கல் வழியாக பம்பை வந்த இருவரும் முகங்கள் தெரியாதவாறு துணியை வைத்து கட்டிக்கொண்டு அதிகாலை தரிசனம் செய்தனர். இவர்களுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கும் கேரளா மாநில போலீசார் பாதுகாப்பு கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
18 ம் படிக்கு செல்லாமல் அதனுடைய பக்கவாட்டில் இருக்கக்கூடிய படிக்கட்டு வழியாக சன்னிதானம் சென்றனர். பெரும்பாலும் இருமுடி காட்டாமல் சபரிலை வரும் பக்தர்கள் இந்த வழியை பின்பற்றுவது சமீப காலமாக நடந்து வருகிறது.
 
அந்த வழியாக இந்த 2 பேரும் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
 
பெண்கள் இருவர் தரிசனம் செய்த நிலையில் சபரிமலை மேல்சாந்தி மற்றும் தந்திரிகள்  செய்வது அறியாது ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றனர் இதனை பரிகார குற்றம் என ஆணை பிறபிக்க அவர்கள் ஆலோசனை செய்து வருவதாகவும் ., அப்படி செய்தால் உச்ச நீதிமன்ற உத்தரவை மீறிய குற்றத்துக்கு கைது செய்யபடலாம் என்ற அச்சமும் அவர்களிடம் இருப்பதாக கூறப்படுகிறது