எஸ். பி. பி  (SPB) என்று எல்லோராலும் அழைக்கப்படும் புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் எஸ் பி. பாலசுப்ரமணியம் அவர்கள் இன்று தீவிர சிகிச்சை பலனின்றி காலமானார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தான் விரைவில் வீடு திரும்பிவிடுவேன் என அவரே மருத்துவமனையில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால் அதன் பிறகு சில நாட்களில் அவரின் நிலைமை மோசமாகி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுயிருந்தார்.

நேற்று மாலை முதல் அவரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிர் இறந்தார்.

திரைப்பட பாடகர் மட்டுமல்லாது இவர் திரைப்பட இசை அமைப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட நடிகர், திரைப்பட பின்னணிக் குரல் தருபவர் எனப் பன்முக அடையாளம் கொண்டவர்.

1966இல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடியதில் இருந்து திரைப்படங்களில் பாடத் தொடங்கினார்.

நாற்பதாயிரத்திற்கும் மேலான பாடலைகளை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி போன்ற பல மொழிகளில் பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி கதாநாயகர்களான
எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் என பல நடிகர்களுக்கு 1970களில் பின்னணிப் பாடல்களை பாடியுள்ளார்.

ரஜினி காந்த், கமல்ஹாசன், கே. பாக்யராஜ், மோகன், விஜய், அஜீத், சூர்யா பல கதாநாயகர்களுக்கும் பின்னணிப் பாடல்களை பாடியுள்ளார்.

கே. வி. மகாதேவன், இளையராஜா, தேவா, வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், ஏ. ஆர். ரகுமான், யுவன் சங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடியுள்ளார்.

உலக அளவில் அதிக எண்ணிக்கையிலான பாடல்களைப் பாடியதற்காக கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார்.

இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது 2001 ஆம் ஆண்டிலும் பத்மபூஷண் விருது 2011 ஆம் ஆண்டிலும் விருது வழங்கியது
இவருக்கு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருது 2016 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது

தமிழ் மொழியில் 19 பாடல்களை ஒரேநாளில் பாடி சாதனை செய்திருக்கிறார்.

70-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார். 45 திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார்

கமல்ஹாசன், ரஜினி காந்த், சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் மறைவால் திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

சமூக வலை தளங்களில் பலரும் எஸ்.பி.பி. மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.