பணம் கொடுத்து பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும் என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

துணைவேந்தர் நியமனத்தில் ஊழல் நடைபெறுவதாக குற்றம்சாட்டிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பின்னர் திடீரென தனிப்பட்ட முறையில் யார் மீதும் புகார் தெரிவிக்கவில்லை என தீடி என பல்டி அத்த்து விளக்கம் அளித்தார்.

ஆளுநர் தனது நிலைபாட்டை மாற்றி கொண்டது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் அனந்த கிருஷ்ணன், துணை வேந்தர் நியமனத்தில் யார் யார்க்கு பணம் கொடுக்கப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான் என்றார்.

இதனை மறுப்பதில் அர்த்தம் இல்லை என்று கூறிய அனந்த கிருஷ்ணன், ஊழல் துணை வேந்தர்கள் மூலம் நியமிக்கப்பட்ட தகுதி இல்லாத ஆசிரியர்களை நீக்க வேண்டும் கேட்டுக்கொண்டார். கல்வித்துறை ஊழல் குறித்து விசாரிப்பதற்காக சுதந்திரமான தனி அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.