அரசியல் கர்நாடகா கொரானா சமூகம்

ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட கோயில் தேரோட்டம்- அரசின் அனுமதியில்லாமல் எப்படி சாத்தியம்.?

கொரோனா ஊரடங்குகை மீறி பாஜக ஆளும் கர்நாடகாவில் மாநிலம் கலாபுராகி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கோயில் தேரோட்டத்தில் பங்கேற்றதுடன் சமூக விலகலையும் பின்பற்றவில்லை. மேலும் இதில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இன்று ஒரே நாளில் கர்நாடகா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு 36 பேருக்கு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 315 ஆக உயர்ந்துள்ளது. 82 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர். 13 பேர் கர்நாடகாவில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி உயிரிழந்த கர்நாடகாவின் கலாபுராகி மாவட்டத்தில் சித்தாபூர் தாலுகாவில் சித்தலிங்கேஸ்வரர் கோயில் தேரோட்ட நிகழச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் சமூக இடைவெளியை புறக்கணித்து, கோயில் திருவிழாவில் மக்கள் ஒன்று சேர்ந்து தேர் இழுத்து கொண்டாடினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் எந்த அனுமதியும் அளிக்கவில்லை என்றாலும், விழாவை தடை செய்யவில்லை. உள்ளூர் காவல்துறையும் வெறும் பார்வையாளர்களாக மட்டும் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் அரசின் துணையில்லாமல் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதும் சாத்தியமன்று.

முன்னதாக ஏப்ரல் 10 ம் தேதி, துருவேகரே தொகுதி பாஜக எம்.எல்.ஏ., ஜெயராம் தனது பிறந்தநாளை நூற்றுக்கணக்கான கிராமவாசிகளுடன் தும்கூரில் உள்ள குப்பி தாலுகாவில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கொண்டாடியிருந்தார். இப்போது இரண்டாவது நிகழ்வாக கோவில் விழா கர்நாடகா மாநிலத்தில் ஊரடங்கை மீறி அரங்கேறி உள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு மிகக் கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில் பாஜக ஆளும் மாநிலங்கள் தொடர்ந்து இதுபோன்ற மதம்சார்ந்த விழாக்கள், நிகழ்வுகளை அரங்கேற்றிவருகின்றன.

ஊரடங்கை மதிக்காமல் பிறந்தநாளை விமர்சையாக கொண்டாடிய பாஜக எம்எல்ஏ

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் என பலரும் தங்கள் உயிரை பொருற்படுத்தாது கடினமாக உழைத்து வரும் நிலையில், இதுபோன்ற நிகழ்வுகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிகின்றன.

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.