இந்தியாவிலேயே பட்டாசு உற்பத்தி செய்யப்படும் ஒரே இடம் சிவகாசி. பட்டாசு உற்பத்தி தொழிலை நம்பி பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.
 
பேரியம் நைட்ரேட் இல்லாமல் பட்டாசு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் சிவகாசியில் உள்ள 1070 பட்டாசு ஆலைகள் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பின்னர் மூடப்பட்டன.
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மூடப்பட்டுள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் எனக்கோரி பட்டாசு உற்பத்தியாளர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
 
அவர்கள் அரசு நேற்று அறிவித்த 2,000 ரூபாய் தங்களுக்கு வேண்டாம் என்றும் தொழிலாளர்கள் கோபத்துடன் தெரிவித்துள்ளனர்.
 
பட்டாசு உற்பத்தி தொழிலுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விலக்கு அளிக்கும் வகையில் தமிழக அரசு சட்டசபையில் சிறப்பு தீர்மானம் இயற்ற வேண்டும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
மேலும் அரசு இதுவரை தங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன் வராத நிலையில் நாளையும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
 
பட்டாசு ஆலை பிரச்னை குறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி. திருச்சி சிவா இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அதில் அவர் பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.