எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி புனேயில் உள்ள ஷானிவார்வாடா பகுதியில் எல்கர் பரிசத் மாநாடு நடந்தது.
 
மாவோயிஸ்ட்டுகள் ஆதரவு தெரிவித்த அந்த மாநாட்டில் பங்கேற்ற ஏராளமான சமூகச் செயற்பாட்டாளர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பேசியதாகக் கூறப்படுகிறது.
 
இந்தக் கருத்துக்களால்தான் மறுநாள் பீமாகோரிகான் பகுதியில் கலவரம் நடந்தது என்று போலீசார் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், எல்கர் பரிசத் வழக்கில் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக சமூகச் செயற்பாட்டாளர், ஆனந்த் டெல்டும்டே மீது புனே போலீசார் சந்தேகித்தனர்.
 
இதன் அடிப்படையில், இன்று காலை அவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். புனே நீதிமன்றத்தில் ஆனந்த் டெல்டும்டே ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
 
கோவாவில் உள்ள கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியராக ஆனந்த் டெல்டும்டே பணியாற்றி வருகிறார். இவர் அம்பேத்கர் குடும்ப மருமகன் முறையும் ஆவார்.  இவரின் கைதுக்கு சமூக வலைதளத்திலே பாஜக வுக்கு எதிராக பலரும் பதிவிட்டு வருகிறார்கள்