மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் மோனோ ரயில் திட்டமாகும். இதன் முதல் அறிவிப்பு 2006-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சியில் இப்பொது நடைபெறும் மெட்ரோ திட்டம் கொண்டு வந்த போது அப்போதைய எதிர்கட்சி தலைவர் ஜெயலலிதா மோனோ ரயில் திட்டமே சிறந்தது என்று வாதிட்டு தான் ஆட்சிக்கு வந்தால் இதனை நிறவேற்றுவேன் என்று உறுதிப்பட கூறினார்...மேலும் அவரது ஆட்சியில் ஜூலை 27, 2011 அன்று ,அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் மோனோரயில் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தும் . இதற்காக மத்திய அரசு நிதி உதவியும் கோரப்பட்டுள்ளது என்றார் ..மேலும் மோனோ ரயில் அமைப்பதற்கான வழிகள், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது என்றும் மகிழ்வுடன் கூறினார் ..சொத்து குவிப்பு வழக்கு காரணமாக அவரால் கவனம் செலுத்த முடியமால் போனது...
ஆனால் அம்மா வழியில் ஆட்சி செய்கிறோம் என்று கூறும் அதிமுகவோ., திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த் மெட்ரோ திட்டத்தையே விரிவுபடத்த போவதாக கூறி வரும் வேளையில்,
ஆகவே அதிமுக வின் ஜெயலலிதாவின் கனவு திட்டம் மோனோ ரயில் குறித்து சட்டப்பேரவையில் இன்று வேளச்சேரி-வண்டலூர் மோனோ ரயில் திட்டம் தொடர்பாக திமுக சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதிலளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, மோனோ ரயில் திட்டம் கொள்கை அளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறை, மெட்ரோ ரயில் பணிகள் நீட்டிப்பு காரணமாக இந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.இந்த பதிலால் பரபரப்பு எற்ப்பட்டது.
தொடர்பு செய்திகள் : அதிமுக ஆட்சியில் சரிந்த முதலீடுகள்