தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த கலவரத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

Special Correspondent

இந்நிலையில் இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஆலோனை நடத்திய பிறகு கலவரம் நடைபெற்ற பகுதிகளை மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் இன்று இரவு தூத்துக்குடி வரவுள்ள நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் சார்பாக இரண்டு உறுப்பினர்கள் தற்போது தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Special Correspondent

மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்களான ஜெயசந்திரன் மற்றும் சித்தரஞ்சன் மோகன்தாஸ் ஆகியோர் கலவரம் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதலாக பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆட்சியர் அலுவலகத்தில் உடைக்கப்பட்ட பொருட்கள், அருகில் இருந்த ஏடிஎம் மற்றும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் எரிக்கப்பட்ட இடத்தையும் ஆட்சியர் சந்தீப் நந்தூரியுடன் பார்வையிட்டனர். மேலும் ஆட்சியர் அலுவகத்தில் சந்தீப் நந்தூரியுடன் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.

Special Correspondent

இதனை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை ஊழியர்கள் குடியிருப்பில் எரிக்கப்பட்ட பகுதிகள், வாகனங்களையும் ஆய்வு செய்தனர். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் 52 பேரையும், உயிரிழந்தவர்களின் உறவினர்களையும் நேரில் சந்தித்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் இன்று முழுவதும் விசாரணை நடத்தப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். கலவரத்தின் மூலக்காரணம், எவ்வளவு பொருட்கள் சேதமடைந்துள்ளன, எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், கலவரத்தில் மனித உரிமை மீறல் உள்ளிட்டவை குறித்து விரிவான அறிக்கையை தயார் செய்து சமர்பிக்கப்படும் என மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர் செய்திகள்