கடந்த 2017ம் ஆண்டில் தனியார் நிறுவனங்கள் எத்தனை திட்டங்களுக்கு எவ்வளவு முதலீடுகளை செய்துள்ளன என்பது குறித்த புள்ளி விவரத்தை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் தொழில் வளர்ச்சித் துறை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதிலும் கடந்த 2017ம் ஆண்டு தனியார் நிறுவனங்கள் 1,972 திட்டங்களுக்காக 3.95 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், கர்நாடகா அதிகபட்சமாக ₹1.52 லட்சம் கோடி முதலீட்டினை ஈர்த்துள்ளது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த முதலீட்டினை பெருமளவு ஈர்த்துள்ளன. நாட்டின் மொத்த முதலீட்டில் 38.4 சதவீதத்தை கர்நாடகா ஈர்த்துள்ளது.
கர்நாடகாவுக்கு அடுத்ததாக இரண்டாம் இடத்தை குஜராத் பெற்றுள்ளது. இந்த மாநிலம் கடந்த 2017ம் ஆண்டு ₹79,068 கோடி முதலீட்டினை ஈர்த்துள்ளது. தேசிய அளவில் 20 சதவீத முதலீட்டினை இம்மாநிலம் ஈர்த்துள்ளது.
₹48,581 கோடி முதலீட்டினை ஈர்த்துள்ள மகாராஷ்ட்ரா 3ம் இடத்தில் உள்ளது. இம்மாநிலம் 12.2 சதவீத முதலீட்டினை ஈட்டியுள்ளது.
அதேநேரத்தில், தமிழகம் 2017ம் ஆண்டில் ₹3,131 கோடிகளை மட்டுமே ஈர்த்துள்ளது. இது தேசிய அளவில் 0.8 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சி காலத்தில் முதல் மூன்று இடங்களில் இருந்த தமிழ் நாடு இன்று படிப்படியாக இறங்கி கடைசி இடத்தில் வந்துள்ளது என்று வேதனையுடன் இங்குள்ள தொழிஇ அதிபர்கள் தெரிவித்து உள்ளார்கள்.
2015 ஆண்டில் நடந்த தொழில் முதலீடு மா நாட்டில் 2.42 லட்சம் கோடிகள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் வரும் என்று ஜெயலலிதா சொன்னார் . ஆனால் அதுவும் இப்போது பொய் என்றனாது...