அரசியல் கல்வி தமிழ்நாடு

மாணவர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக; போராட்டத்தை முன்னெடுக்கும் திமுக

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் அதிமுக அரசுக்கு எதிராக திமுக நாளை (அக்டோபர் 24) கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த உள்ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் வேண்டுமென்றே ஒப்புதல் அளிக்காமல் உள்ளதாக குற்றம் சாட்டி, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் மேலும் வாசிக்க …..

அரசியல் கொரானா தமிழ்நாடு

தமிழக ஆளுநருக்கு கொரோனா தொற்று உறுதி; தனியார் மருத்துவமனையில் அனுமதி

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், தற்போது ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா மிக வேகமாக பரவி வருகிறது. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலரும் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 5879 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 251738 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளுநர் மாளிகையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஆளுநர் மாளிகையில் கடந்த வாரம் சிலருக்கு கொரோனா மேலும் வாசிக்க …..