கேளிக்கை சினிமா

விஜய் சேதுபதி நடிப்பில் ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘முகிழ்’ வெப் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் க/பெ.ரணசிங்கம். இப்படம் கொரோனா லாக்டவுன் காரணமாக ஜீ5 ஓடிடி தலத்தில் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு போதுமான வரவேற்பு இல்லை. தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13 மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா தேசியம் விவசாயம்

விவசாயிகள் போராட்டம்; போலி செய்தி பரப்பியதற்காக மன்னிப்பு கோரி நடிகை கங்கனாவிற்கு நோட்டீஸ்

விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற 80 வயது மூதாட்டி குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்டதற்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டுமென சீக்கிய குருத்வாரா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. நடிகை கங்கனா ரனாவத் இப்போது பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் நடத்தும் டெல்லி சலோ போராட்டம் குறித்து போலியான கருத்து வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகளின் சாகீன் பாக் போராட்டத்தில் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

நடிகை கங்கனா காவல் நிலையத்தில் ஜனவரி-8 நேரில் ஆஜராக உத்தரவு- மும்பை உயர்நீதிமன்றம்

தேசத்துரோகம் மற்றும் இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் விதத்தில் கருத்து வெளியிட்டதற்காக நடிகை கங்கனா ரனாவத் மற்றும் அவரது அவரது சகோதரி ரங்கோலி சாந்தல் இருவரும் நேரில் ஆஜராக மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமீப காலமாக சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து பல பிரச்சினைகளை எதிர் கொண்டுள்ளார். இந்நிலையில் இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்ததாக குற்றம்சாட்டி, கங்கனா மீதும் அவரது சகோதரி ரங்கோலி மேலும் வாசிக்க …..

கேளிக்கை சமூகம் தமிழ்நாடு வாழ்வியல்

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை; மீறினால் ரூ.5,000 அபராதம், 6 மாதம் சிறை

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் வழங்கி உள்ளார். கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இணையதள சேவைகள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 24% அதிகரித்துள்ளது. அதில் குறிப்பாக ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பல இளைஞர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் பல இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். எனவே தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் எனக் கூறி மதுரை மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

விஜய் ஆண்டனியைத் தொடர்ந்து, ‘அருவா’ பட இயக்குனர் ஹரியின் அதிரடி அறிவிப்பு

சூர்யாவின் ‘அருவா’ படத்திற்காக தான் வாங்கும் சம்பளத்தை 25% குறைத்துக்கொள்வதாக ஹரி அறிவித்துள்ளார். இயக்குனர் ஹரி அடுத்து சூர்யாவை வைத்து அருவா என்கிற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதமே துவங்கி இருக்க வேண்டும். ஆனால் கொரோனா ஊரடங்கின் காரணமாக அது துவங்கவில்லை. கொரோனா ஊரடங்கால் சினிமா தயாரிப்பாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள், அதனால் நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் தங்கள் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தயாரிப்பாளர்களின் துயரை உணர்ந்து, முதல் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

ஜோதிகாவை தொடர்ந்து OTTயில் படத்தை வெளியிட தயாராகும் சித்தார்த்

பொன்மகள் வந்தாள் படத்தை தொடர்ந்து சித்தார்த் நடித்துள்ள டக்கர் படமும் நேரடியாக OTTயில் ரிலீஸ் ஆகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா லாக்டவுன் மக்களை வீட்டுக்குள்ளேயே முடக்கியுள்ளது. சினிமா உட்பட அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பல கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள பல படங்களும் ரிலீஸ் ஆக முடியாமல் அப்படியே தேங்கி உள்ளன. தற்போது ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்ட நிலையில் இருக்கும் தியேட்டர்கள் திறக்கப்பட இன்னும் இரண்டு மாதங்கள் கூட ஆகலாம் என கூறப்பட்டு வரும் நிலையில், மக்கள் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

நடிப்புத் திறனை மட்டுமே நம்பி வெற்றிகண்ட இர்ஃபான் கான் மறைவு-அதிர்ச்சியில் ரசிகர்கள்

உலக அளவில் சிறந்த நடிகராக திகழ்ந்த இர்ஃபான் கானின் மறைவு ஒட்டுமொத்த திரைத்துறையினர் உட்பட அனைவரையும் கண்ணீர் கடலில் மூழ்கச் செய்திருக்கிறது. 1988ம் ஆண்டு சின்னத்திரையில் இருந்து, திரை துறைக்கு வந்த இர்ஃபான், நடித்த முதல் இந்தி படமான சலாம் பாம்பே ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. நடிகர் இர்ஃபான் கான். ஜுராசிக் வேர்ல்ட் தி ஜங்கிள் புக், தி அமேஸிங் ஸ்பைடர்மேன், லைஃப் ஆஃப் பை, ஸ்லம்டாக் மில்லியனர் ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்து நடித்து உலகப் மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

துல்கர் சல்மான் படக் காட்சிகளை நீக்க கோரும் தொல். திருமாவளவன்

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் ‘வரனே அவசியமுண்டு’ என்ற மலையாள படத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை இழிவு செய்யும் விதமாக காட்சி இருப்பதாக பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. அக்காட்சியை உடனடியாக நீக்க வேண்டுமென கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில், மலையாள சினிமாக்களில் தமிழர்களை கொச்சைப்படுத்துவதாக ஒரு வாதம் வைரலாகி வருகிறது. இதற்கு காரணம் நடிகர் துல்கர் சல்மான் தயாரித்து நடித்த ‘வரனே அவசியமுண்டு’ மேலும் வாசிக்க …..

கேளிக்கை சினிமா

ஜோதிகா கோயில்கள் பற்றி பேசியது முதிர்ச்சியற்ற பேச்சு -நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சை

நடிகை ஜோதிகா கோயில்கள் பற்றி பேசியது முதிர்ச்சியற்ற பேச்சு என நடிகர் எஸ்.வி.சேகர் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற விழாவில், ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகை விருது ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் அந்நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில் ஜோதிகா கோயில்கள் பற்றி பேசியுள்ள வீடியோ தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் பேசிய நடிகை ஜோதிகா, தஞ்சையில் படபிடிப்பிற்காக சென்றபோது, பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் பிரபலமானது. அழகாக இருக்கும். கண்டிப்பாக பார்க்க மேலும் வாசிக்க …..

கலாச்சாரம் கேளிக்கை சட்டம் சமூகம் பயணம் வாழ்வியல்

பொள்ளாச்சியில் போதை உல்லாசம் “அக்ரி நெஸ்ட்” விடுதிக்கு சீல் வைப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தென்னை நகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு தென்னந்தோப்புகளுக்கு நடுவே ஓய்வு எடுக்க பண்ணை வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இவற்றில் சில உரிய அனுமதி இல்லாமல் கேளிக்கை விடுதிகளாக செயல்பட்டு வருகின்றன.   பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை அடுத்த சேத்துமடை உள்ளிட்ட பகுதிகளில் இதுபோல ஏராளமான சொகுசு விடுதிகள் செயல்படுவதாக புகார்கள் உள்ளன.   இங்கு போதை பொருள் மற்றும் மதுவிருந்து தாராளம், சூதாட்டம், நடன விருந்து என்று இங்கு கேளிக்கை விருந்துகள் மேலும் வாசிக்க …..