நடிகர் விக்ரமின் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களுக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படத்தை இயக்கியுள்ளார் அஜய் ஞானமுத்து. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக அறிமுகமாகிறார்.
இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக கேஜிஎஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். இப்படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், ஆனந்த ராஜ், ரோபோ ஷங்கர், மியா ஜார்ஜ், மிர்னாலினி ரவி, பூவையார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
[su_youtube url=”https://www.youtube.com/watch?v=8ScCLfGGOPY&feature=emb_title” width=”700″ autoplay=”yes” title=”விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’ படத்தின் டீஸர் வெளியீடு”]
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இந்த படத்தை தயாரித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் 7 கெட்டப்புகளில் விக்ரம் இடம் பெற்றிருந்தார்.
இதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தில் இடம்பெற்ற ‘தும்பி துள்ளல்’ என்ற பாடல் மற்றும் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் இன்று (ஜனவரி 09) ‘கோப்ரா’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிரடி, ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும் டீசரில் கணித கோட்பாடுகளை பயன்படுத்தி குற்றம் செய்பவராக நடித்திருக்கிறார் விக்ரம். அவருக்கு வில்லனாக தோன்றியுள்ளார் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்.
திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி; தமிழக அரசு திடீர் பல்டி