நேற்று வெளியிட்ட தீர்ப்பில் உச்சநீதிமன்றம் கைபேசி மற்றும் வங்கி கணக்குக்கு ஆதார் தேவை இல்லை ஆனால் வருமான வரி கணக்கு எண்ணுடன் (‘பான்’) ஆதார் எண்ணை இணப்பது அவசியம் என்று கூறி இருந்தது

இந்த நிலையில் வருமான வரி கணக்கு எண்ணுடன் (‘பான்’) ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ந் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது.

மேலும் கடந்த 24-ந் தேதி வரை இந்தியா முழுவதும் 21 கோடியே 8 லட்சத்து 16 ஆயிரத்து 676 வருமான வரி கணக்கு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன என்ற தகவலும் வெளியாகி உள்ளது

மேலும் இதுவரை 41 கோடியே 2 லட்சத்து 66 ஆயிரத்து 969 வருமான வரி கணக்கு எண்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதில் சுமார் 40 கோடியே ஒரு லட்சம் வருமான வரி கணக்கு எண்கள் தனிநபர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுவரை சுமார் 50 சதவீத வருமான வரி கணக்கு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளன என்ற தகவலை வருமான வரித்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.