எதிரி நாடுகளின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற் காக, சுமார் ரூ.31,500 கோடி மதிப்பில் எஸ்400 ரக அதிநவீன ஏவு கணைகளை ரஷ்யாவிடமிருந்து வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்காவின் எதிரிகளுக்கு பொருளாதார தடை மூலம் பதிலடி கொடுக்கும் சட்டத் தின் (சிஏஏடிஎஸ்ஏ) கீழ் ரஷ்யாவுக்கு சமீபத்தில் பொருளாதார தடை விதிக்கப்பட்டது.
இவ்விரு நாடு களுக்கும் இடையே பல்வேறு விவ காரங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதே இதற்குக் காரணம். இதன்படி, ரஷ்யாவுடன் எந்த நாடும் ராணுவ தளவாடங்களை வாங்க முடியாது. எனினும், இந்தியா வுக்கு இதில் விலக்கு வழங்க அமெரிக்கா முன்வந்திருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், இதை மறுத்த அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, “சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் எந்த ஒரு தனி நாட்டுக்கும் விதிவிலக்கு அளிக்க முடியாது. குறிப்பாக இந்தியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். பொருளாதார தடைக்கு வாய்ப் புள்ள ஒப்பந்தங்கள் செயல்படுத் தப்படுவதை தவிர்ப்பதற்கு தேவை யான உதவிகள் செய்வது குறித் தும் ஆலோசித்தோம்” என்றார்.