ரஃபேல் விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, உச்சநீதிமன்றம் வரும் மார்ச் 6-ஆம் தேதி விசாரிக்கிறது.
 
இந்திய விமானப் படைக்கு, பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக மத்திய பாஜக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ரூ.58, 000 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில் பெரிய அளவில் ஊழல் பாஜகவின் பிரதமர் மோடி நேரடியாக முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
 
இதனிடையே, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், ரஃபேல் ஒப்பந்த நடைமுறையில் சந்தேகம் கொள்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் கடந்த டிசம்பர் 14-இல் தீர்ப்பளித்தது.
 
அதேசமயம், ரஃபேல் விமானத்தின் விலை, கொள்முதல் நடைமுறை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை தெரிவித்துள்ளது.
 
அதனடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் அருண் ஷோரி, யஷ்வந்த் சின்ஹா, சமூக ஆர்வலர் பிரசாந்த் பூஷண் உள்ளிட்டோர் சார்பில் மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 
அந்த மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் அண்மையில் ஒப்புக் கொண்டது.
 
இதைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.கே.கௌல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணை நடைபெற்றது.
 
அப்போது, தங்களது மனுக்களை வழக்கமான நீதிமன்ற நடைமுறைகளின்படி விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் கோரப்பட்டது. அக்கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
 
இந்நிலையில், இந்த மறுஆய்வு மனுக்களை உச்சநீதிமன்றம் வரும் மார்ச் 6-தேதி விசாரிக்கவுள்ளது. தேரதல் நேரத்தில் இந்த செய்தி பாஜகவினரை கலக்கத்தில் அழத்தி உள்ளதாக உட்கட்சி செய்தி குறிப்புகள் தெரிவிக்கின்றன