ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவையை அந்த மாநிலத்தின் ஆளுநர் சத்யபால் மாலிக் புதன்கிழமை திடீரென கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
 
ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியிலிருந்த பிடிபி கூட்டணி அரசுக்கு அளித்த ஆதரவை பாஜக கடந்த ஜூன் மாதம் திரும்பப் பெற்றது. இதனால், பிடிபி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமலில் இருந்தது. அந்த மாநில சட்டப்பேரவையை ஆளுநர் முடக்கி வைத்திருந்தார்.
 
இதனிடையே, ஜம்மு-காஷ்மீரில் 2 எம்எல்ஏக்களை கொண்ட சஜத் லோனேயின் மக்கள் மாநாட்டு கட்சி தலைமையில் புதிய ஆட்சியமைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டது.  இதற்குப் போட்டியாக, பிடிபி, காங்கிரஸ், என்.சி. ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.
 
இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா மற்றும் பிடிபி மூத்த தலைவர் அல்டாப் புகாரி ஆகியோர் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
 
ஆதனால் பிடிபி சார்பில் முதல்வராக இவர்தான் பதவியேற்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதேபோல், ஒமர் அப்துல்லாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.ஒய். தாரிகாமி எம்எல்ஏவும் தனியே சந்தித்துப் பேசினார். இதனால் ஜம்மு-காஷ்மீரில் பிடிபி, என்.சி., காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சியமைப்பது உறுதியானது.
 
இதைத் தொடர்ந்து, ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம், பிடிபி கட்சி ஆட்சியமைக்க உரிமை கோரியது. இதுதொடர்பாக ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு பிடிபி தலைவர் மெஹபூபா முஃப்தி கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சட்டப்பேரவையில் 29 எம்எல்ஏக்களை கொண்டு பிடிபி கட்சி, தனிப்பெரும் கட்சியாகத் திகழ்கிறது.
 
மாநிலத்தில் பிடிபி ஆட்சியமைக்க என்.சி., காங்கிரஸ் ஆகியன ஆதரவு தெரிவித்திருப்பதை ஊடக செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இதில் என்.சி. கட்சிக்கு 15 எம்எல்ஏக்களும், காங்கிரஸுக்கு 12 எம்எல்ஏக்களும் உள்ளனர். ஆக மொத்தம், சட்டப்பேரவையில் 3 கட்சிகளுக்கும் 56 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
 
ஸ்ரீநகரில் தற்போது நான் இருப்பதால், உங்களை உடனடியாக நேரில் பார்க்க இயலவில்லை. ஆதலால், மாநிலத்தில் ஆட்சியமைக்க உங்களிடம் கடிதம் மூலம் உரிமை கோருகிறோம் என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
இதை தொடர்ந்து, சுட்டுரையில் மெஹபூபா முஃப்தி வெளியிட்ட பதிவுகளில், பேக்ஸ் மூலம் இக்கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப முயற்சித்தோம். ஆனால் கடிதம் பேக்ஸ் மூலம் செல்லவில்லை. மேலும் தொலைபேசி மூலமாகவும் ஆளுநரிடம் பேச முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனிடையே, மக்கள் மாநாட்டு கட்சியின் தலைவர் சஜத் லோனேயும், ஆட்சியமைக்க ஆளுநர் சத்யபால் மாலிக்கிடம் உரிமை கோரினார். இதுகுறித்து ஆளுநர் சத்யபால் மாலிக்குக்கு அவர் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், எனது கட்சியின் 2 எம்எல்ஏக்களுடன் சேர்த்து, பாஜகவின் 25 எம்எல்ஏக்கள், மேலும் 18க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த 18 எம்எல்ஏக்கள் விவரம் யார் என்று பாஜக அதரவு சஜத் லோனே தெரிவிக்கவில்லை
 
அடுத்தடுத்து 2 கட்சிகளும், மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியதால், எந்த கட்சியை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் சத்யபால் மாலிக் அழைப்பு விடுக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
மேலும் மெகபூபா முஃப்தி ஆட்சியமைக்க அனுமதி கோரி ஆதரவுக் கடிதங்களை ஆளுநர் மாளிகைக்கு ஃபேக்ஸ் செய்ய முயன்றபோது அதை பெறவேண்டிய ஆளுநரின் ஃபேக்ஸ் இயந்திரம் வேலை செய்யவில்லை என்றும்.,  இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்த முன்னாள் முதல்வர் மெகபூபா, ஆனால், அதே ஃபேக்ஸ் இயந்திரம், சட்டசபை கலைக்கப்படும் அறிவிப்பை மட்டும் எப்படி அனுப்பியது என கேள்வி வைத்துள்ளார் .
இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையை தான் கலைக்க மட்டேன் என்று ஆளுநர் சத்யபால் மாலிக் குறியது குறுப்பிடதக்கது .
ஆனால், இந்த எதிர்பார்ப்புக்கு மாறாக, ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையை ஆளுநர் சத்யபால் மாலிக் புதன்கிழமை இரவு கலைத்து உத்தரவிட்டார்.
 
மேலும்  திடிர் என, ஜம்மு-காஷ்மீர் மாநில அரசியலமைப்பு சட்ட பிரிவுகளுக்கு உள்பட்டு, சட்டப் பேரவையை ஆளுநர் கலைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
 
பாஜக ஆட்சியிலிருக்க வேண்டும் அல்லது வேறு யாரும் இருக்கக் கூடாது; இதுவே பாஜகவின் கொள்கை என விமர்சிதது உள்ளார் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத்..
 
மெஹபூபா முஃப்தி ஆட்சியமைக்க உரிமை கோரிய சில நிமிடங்களில், சட்டப்பேரவை கலைக்கப்பட்டிருப்பது தற்செயலாக நடக்கவில்லை. ஆளுநர் மாளிகைக்கு புதிய பேக்ஸ் இயந்திரம் தேவைப்படுகிறது என சொல்கிறார் தேசிய மாநாட்டு கட்சியின் செயல் தலைவர் ஒமர் அப்துல்லா
 
ஆனால் ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் நடத்துவதுதான் பிரச்னைக்கு தீர்வாக இருக்கும் என்று பாஜக தெரிவித்துள்ளது.