நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழக அரசு இன்று (28.10.2021) அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 27.08.2021 அன்று 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, முகாம்களில் வசிக்கக்கூடிய இலங்கை அகதிகளுக்கும், வெளிப்பதிவில் உள்ள அகதிகளுக்கும் உரிய உதவிகளை வழங்கிடவும், அடிப்படை வசதிகளை மேம்படுத்திடவும்,

குடியுரிமை வழங்குதல் மற்றும் அவர்களில் இலங்கை திரும்பும் அகதிகளுக்குத் தகுந்த ஏற்பாடுகள் செய்தல் போன்ற நீண்டகாலத் தீர்வினைக் கண்டறிய ஏதுவாக ஒரு ஆலோசனைக் குழு விரைவில் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அதன்படி, இலங்கை தமிழர்களின் நலனுக்கான ஆலோசனைக் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு இன்று (28.10.2021) அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள அக்குழுவில்,

துணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்ட வல்லுநர் மனுராஜ் சண்முகசுந்தரம், நக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவாக இது செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆலோசனைக் குழுவானது, முகாம்களில் உட்கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், கல்வி, சமூக பாதுகாப்பிற்கு உதவிக்கு வகை செய்தல், குடியுரிமை, இலங்கைக்கு விரும்பி செல்லுதல் ஆகிய 3 அம்சங்களை உள்ளடக்கி செயல்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.facebook.com/savenra/posts/7257705477588646