விழுப்புரம் சாலாமேடு ரெயில்வே கேட் அருகே 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இதனிடையே சாலாமேடு ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்த மக்கள் நடத்திய தொடர் போராட்டத்தின் காரணமாக இரண்டு மதுக்கடைகளும் மூடப்பட்டன.
இந்நிலையில் சாலாமேடு ரயில்வே கேட் பகுதியை சேர்ந்த சில பெண்கள் அந்த டாஸ்மாக் திறக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். தனது கணவன்மார்கள் நீண்ட தூரம் சென்று மது குடிக்க முடியாமல் தவிப்பதாகவும், மதுக்கடையை இங்கு திறப்பதினால் எந்தவித பாதிப்பும் இல்லை என அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
தமிழகமெங்கும் டாஸ்மாக்கிற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிக்க நீண்ட தூரம் செல்வதால் தவிக்கும் கணவர்களுக்காக மனைவிகள் போராட்டம் செய்து மூடிய டாஸ்மாக்கை திறக்க கோரி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.