தமிழ்நாட்டில் புகையிலை கலந்து தயாரிக்கப்படும் குட்கா என்ற பாக்கிற்கு தடைவிதிக்கப்பட்ட 2013ஆம் ஆண்டில் சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தவர் ஜார்ஜ். அந்த காலகட்டத்தில் சென்னையை அடுத்துள்ள செங்குன்றத்தில் ஒரு குட்கா கிடங்கு ஒன்றில் மிகப் பெரிய சோதனை நடத்தப்பட்டது.

இதற்கு பிறகு இந்த விவகாரத்தில் பெரிதாக ஏதும் நடக்கவில்லை.சில ஆண்டுகளுக்குப் பிறகு வருமானவரித் துறை எம்டிஎம் குட்கா உற்பத்தியாளர் மாதவராவின் இருப்பிடங்களில் நடத்திய சோதனையில், அவரது நாட்குறிப்பு சிக்கியது. அதில் காவல் ஆணையர் ஜார்ஜ் பெயரும் இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

அந்தத் தருணத்தில் மூன்றாவது முறையாக சென்னை நகர ஆணையரான ஜார்ஜ் குட்கா முறைகேடு குறித்து அதிகாரிகள் சிலர் பெயரைக் குறிப்பிட்டு தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதன் பின்னர் அவர் ஓய்வுபெற்றார்

இதன் பிண்ணனியில் தான் குட்கா விற்க ரூ. 40 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக வந்த புகாரில் சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் சிக்கினார். அதன்பேரில் சென்னை நொளம்பூரில் உள்ள அவரது வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சிபிஐ சோதனை குறித்து ஜார்ஜ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், தானோ, டி.கே. ராஜேந்திரனோ காவல்துறை தலைவராவதைத் தடுக்கவே குட்கா ஊழல் விவகாரத்தில் தங்களை சம்பந்தப்படுத்தி தகவல்கள் வெளியிடப்பட்டன என தெரிவித்தார் மேலும் சென்னையில் துணை கமி‌ஷனராக இருந்த ஜெயக்குமார் மீது பல்வேறு குற்றசாட்டுகளை கூறினார். ஜெயக்குமார் பணியில் இருந்தபோது குட்கா, ஊழல் போன்ற சட்ட விரோத செயல்கள் நடந்தது. அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த ஊழல் தொடர்பான தகவல்களை ஜெயக்குமார் என்னிடம் தரவில்லை. ஊழல் விவகாரம் தொடர்பான அனைத்து விவரங்களும் ஜெயக்குமாருக்கு தெரியும். அவர் பணியில் சரியாக செயல்படவில்லை என்று கூறினார். சென்னையில் துணை கமி‌ஷனராக பணியாற்றிய ஜெயக்குமார் தற்போது விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார்.

ஜார்ஜின் குற்றசாட்டுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் அளித்த பதிலில் “குட்கா ஊழல் தொடர்பாக தற்போதைக்கு எந்த கருத்தையும் நான் சொல்ல விரும்பவில்லை. என் நேர்மையை சென்னை மக்கள் நன்கு அறிவர். உழைப்பது என் கடமை என்றாலும் இந்த குற்றசாட்டு தொடர்பாக பதில் சொல்ல வேண்டியது அவசியமாகி உள்ளது.முன்னாள் கமி‌ஷனர் ஜார்ஜ் தான் குற்றம் அற்றவர் என்பதை நிரூபிக்க வேண்டும். அதை விடுத்து பிற அதிகாரிகள் மீது பழிபோடக்கூடாது.பழிவாங்கும் நோக்கத்துடன் என் மீது ஜார்ஜ் குற்றம் சாட்டுகிறார். அவதூறு பரப்பி வருகிறார்.என் மீது எந்த குற்றமும் இல்லை. நான் இதை எங்கே நிரூபிக்கவேண்டுமோ அங்கு நிரூபிப்பேன்.மேல் மட்ட அரசியல் அது. மேல் லெவலில் நீங்கள் அதை ஆராய்ந்து பார்த்தீர்களேயானால் அது உங்களுக்குத் தெரியும். மேல் மட்டத்தில் அவர்களைக் குறிவைக்க முடியாததால் என்னைக் குறிவைக்கிறார்.என கூறினார்.

இந்த நிலையில் சட்ட அமைச்சர் சண்முகம் ஜெயக்குமார்க்கு ஆதரவாக பேசி உள்ளது பலரின் புருவத்தை உயர்த்தி உள்ளது . மேலும் கசியும் தகவல் என்ன்வென்றால் சிபிஐ அனைத்து ஆதாரங்களையும் சேகரித்து விட்டதாகவும் அமைச்சராக இருப்பதால் தமிழக ஆளுனர் அனுமதிக்காக காத்து இருப்பதாகவும் ., அனுமதி கிடைப்பின் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருடன் சேர்த்து முன்னாள் கமிஷனர் ஜார்ஜையும் சேர்த்து 40 கோடி குட்கா ஊழலில் கைது செய்ய இருப்பதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன .

இந்த சூழ்நிலையில் இன்று குட்கா 40 கோடி அதிமுக அரசின் ஊழல் வழக்கில் கைதான 5 பேருக்கு 4 நாள் சிபிஐ காவல் நீதிமன்றம் கொடுத்துள்ளதால் இது அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருடன் சேர்த்து முன்னாள் கமிஷனர் ஜார்ஜையும் கைது செய்வதற்கு அடித்தளமாக அமையுமா என்ற பரபரப்பும் அரசியலில் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது ..