பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சமூக நீதிக்கு எதிரானது என்று லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை தெரிவித்தார்.
 
பொருளாதாரத்தில் மாதம் 66666 ரூ சம்பாதித்தாலும் அவர்கள் நலிவுற்ற உயர்ஜாதி வகுப்பினர் என கூறி 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க லோக்சபாவில் நேற்று மத்திய அரசு சட்ட மசோதா தாக்கல் செய்தது.
 

திமுக சார்பில் இதை எதிர்த்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்த கருத்து‘முன்னேறிய வகுப்பில் உள்ள, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு’ என்ற மத்திய அரசின் முடிவு சமூகநீதிக்கு எதிரானது மட்டுமல்ல அரசியல் சட்டத்திற்கு முரணானது ,  பாஜக அரசு தேர்தல் லாபத்துக்காக பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் விளையாடுவதா என்றும் சாடி இருந்தார்

 இந்த  நிலையில் அதிமுகவும் இதை எதிர்க்க தொடங்கியது . விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய மூத்த அரசியல்வாதியும் பாராளுமன்ற துனைசபாநாயகர்   தம்பிதுரை, பாஜக அரசை கடுமையாக சாடி பேசினார் , மேலும் அவர் சமூக அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றார்.

 
பிரதமர் மோடி ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் டெபாசிட் செய்து விட்டால், வறுமை ஒழிந்து விடப்போகிறது.. பிறகு இட ஒதுக்கீடுக்கு தேவை இருக்காது என்றும் கடும் விமர்சனங்களை அவர் முன்வைத்தார்.
 
இதன் பிறகு பெரியார், ஜாதிக் கொடுமைக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்தார். வர்ணாசிரம தர்மப்படி, பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று வகுத்துள்ளனர்.
 
வேதம் ஓதுபவர்கள் பிராமணர்கள். நாட்டை ஆள்பவர்கள் சத்திரியர். வியாபாரம் செய்பவர்கள் வைசியர். மற்ற தொழில் செய்யும் அனைவரும் சூத்திரர்கள்.
 
அப்படி என்றால் நாம் அனைவருமே சூத்திரர்கள்தான். நாலாம் தர மக்கள் நாம். இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகதான் பெரியார் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றம் வேண்டும் என்று போராட்டம் நடத்தினார். தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்று வலியுறுத்தினார்.
 
எனவேதான் அம்பேத்கர் போன்ற, நமது சட்டத்தை இயற்றிய முன்னோடிகள் அனைவருமே பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கூடாது, ஜாதி கொடுமை ஒழிய வேண்டுமானால் ஜாதி அடிப்படையில்தான் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டம் இயற்றினர்.
 
பிறப்பால் நாம் ஒரு ஜாதியை சேர்ந்தவர் என்றால் அதை பிற்காலத்தில் மாற்றிக்கொள்ள முடியாது. பொருளாதாரம் என்பது அப்படியானது இல்லை.
 
எனவே ஜாதி அடிப்படையில்தான், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். பிறப்பால் ஒரு முதலியார் என்றால் இறுதிவரை அவர் முதலியாராகத்தான் இருக்க முடியும், நாடார் என்றால் நாடாராகத்தான் இருக்க முடியும். வன்னியர் என்றால் வன்னியர் ஆகத்தான் இருக்க முடியும். இது நமது நாட்டில் உள்ள ஒரு பெரும் கொடுமை.
 
ஆனாலும் விவாதத்திற்கு பிறகு, இந்த சட்டத் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.  இந்த நிலையில் இவ்வளவு வேகமாக திவிரமாக அதிமுக பொருளாதார அடிப்படையில் எதிர்க்க என்ன காரணம் ..
 
எம்ஜியாரின் அதிமுக கட்சி 1980ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில்  30 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் திமுக & காங்கிரஸ் கூட்டணியிடம் படுதோல்வி சந்தித்த வாக்கு விவரம்:  
 திமுக +   55.9 %
அதிமுக +   40.1%
15.8 % வாக்கு வித்யாசத்தில்  ரெண்டே ரெண்டு இடத்தில மட்டும் ஜெயித்து படுதோல்வி கண்டது அதிமுக ,  மீதம் உள்ள 38 இடங்களையும் திமுக கூட்டணி வென்றது
 
 அதிமுக வின் படு தோல்விக்கு  காரணம் , பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது என்ற முடிவை எம்ஜிஆர் தீவிரமாக ஆதரித்தது தான் . பின்னர் இந்த நிலையை எம்ஜியார் மாற்றி கொண்டு   பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு முடிவை கைவிடுவதாக அறிவித்தார் . இதனால் இதற்க்கு பின்னர் அதே ஆண்டில் அவர் ஆட்சி மத்திய அரசால் ஊழல் குற்ற சாட்டுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி மத்திய அரசால்  கலைக்கப்பட்டு   நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில் 
 
அதிமுக +   48.9 %
திமுக +   44.4 %
சதவித வாக்குகளை பெற்று படு தோல்வியில் இருந்து கட்சியை மீட்டு மீண்டும் ஆட்சியை பிடித்தார் என்பது தான் வரலாறு. எம்ஜியாரே தோற்ற திட்டம் என்பதால் எம்ஜியாருடன் பயணித்த மூத்த அரசியல்வாதி தம்பிதுரை இதனை எதிர்க்கா விட்டால் தானே வியப்பு வரும் …