சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக வெள்ளிக்கிழமை ஓய்வுபெற்ற ஐஜி பொன் மாணிக்கவேலை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
இதனை கேள்ளிப்பட்ட பொன்.மாணிக்கவேல் ” உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை நான் எதிர்பார்க்கவில்லை. ஓய்வு பெற தயாராகி வந்த எனக்கு ஊழியர்கள், காவலர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முழு மனநிறைவுடன் ஓய்வு பெற இருந்த எனக்கு இந்த உத்தரவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐ.ஜி.யாக இன்று ஓய்வு பெற்ற நான், இனி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றுவேன்.
இதற்காக, இனி திருச்சி, கும்பகோணத்திலேயே முகாமிட்டு எனது பணியை செய்வேன். சிலை கடத்தல் வழக்குகளின் விசாரணையை ஓராண்டுக்குள் முடிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுப்பேன்.
ஆஸ்திரேலியாவில் உள்ள 8 சிலைகளையும் விரைவில் மீட்டு, இங்கு கொண்டு வருவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு விசாரணை செய்யும் அனைத்து வழக்குகளும் 36 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றவையாகும்.
இந்த வழக்குகளில் துப்பு துலக்குவது சாதாரண பணி அல்ல. யாரையும் சிறுமைப்படுத்தாமல் எனது பணி இருக்கும். உயர்நீதிமன்றம் பழைமையான சிலைகளை மீட்டு, பாதுகாத்திட எடுத்த முயற்சிகளின் காரணமாகவே, இந்தளவுக்கு நடவடிக்கைகள் இப்போது எடுக்கப்படுகிறது. எனக்கு அளிக்கப்பட்ட அதிகார வரம்பை மீறி நான் செயல்படமாட்டேன். உயர்நீதிமன்றம், அரசு, சட்டம் ஆகியவற்றுக்கு கட்டுப்பட்டே நான் செயல்படுவேன் என்றார்.
இந்நிலையில், ஆரம்பம் முதலே பொன்.மாணிக்கவேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அதிமுக அரசு இந்த உத்தரவை சற்றும் எதிர்பர்க்காத நிலையில் ., சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் பொன்.மாணிக்கவேலுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பும், உதவியும் அளிக்கும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மூலம் தெரிவித்துள்ளது.
மேலும் ஆளும் அதிமுக அரசின் மற்றும் ஹிந்துவா அமைப்புகள் (பாஜக அதரவு) பல முக்கிய புள்ளிகள் இதில் சம்பந்தம் உள்ளதாக ஐஜி பொன் மாணிக்கவேல் அமைப்பு கூறிய நிலையில் , முக்கியமாக 36 ஆண்டுக்கு முன்னர் எம்ஜியார் ஆட்சி காலத்தில் கடத்திய சிலையில் சம்பந்தப்பட்ட அதிமுக முக்கிய புள்ளிகளுக்கு இந்த தீர்ப்பு கலக்கத்தை கொடுத்துள்ளதாக எஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.