இந்தியாவின் முதல் துணைப்பிரதமரும், சுதந்திரத்துக்குப் பிறகு பல சமஸ்தானங்களாகப் பிரிந்திருந்த பகுதிகளை ஒருங்கிணைக்க முக்கிய பங்காற்றியவருமான சர்தார் வல்லபபாய் பட்டேலுக்கு மரியாதை செய்யும் வகையில், அவருடைய சொந்த மாநிலமான குஜராத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர் உயரத்தில் அவருக்குச் சிலை வைத்துள்ளது மத்திய அரசு.
காங்கிரஸ் தலவரான பட்டேலுக்கு அதுவும் நேருவை தலைவராக ஏற்று அவரின் அமைச்சரைவில் உள்துறையின் இருந்த பட்டேலின் சிலைக்காக 3,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது” எனப் பல அரசியல் தலைவர்களும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது உலகின் மிக உயரமான சிலையாக அமைந்துள்ளது. இதற்கு ‘ஒற்றுமைச் சிலை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 3,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பிரமாண்ட சிலைக்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. “இந்த 3,000 கோடி ரூபாயைக் கொண்டு பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்யலாம்.
இந்திய அளவில் இருந்த இந்த எதிர்ப்பு தற்போது பிரிட்டன் சென்றுள்ளது. பிரிட்டன் எம்.பி-யான பீட்டர் போன் என்பவர் பட்டேல் சிலையை எழுப்பிய மத்திய அரசைக் கடுமையாக சாடியுள்ளார். அதில் அவரு கூறிய விவரம் பின் வருமாறு
“இது சுத்த முட்டாள்தனம். கடந்த 5 ஆண்டுகளில் பிரிட்டன் மக்கள் வரிப்பணமான சுமார் 9,000 கோடி பணத்தை இந்தியா வாங்கியுள்ளது. பெண்களின் உரிமைகள் பிரச்னைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள், மற்றும் மத சகிப்புத்தன்மை உள்ளிட்ட பல சமூக திட்டங்களுக்காக இந்த நிதி வழங்கப்பட்டது. நலத் திட்டங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இந்தியா நிதி பெறுகிறது. ஆனால், இதுபோன்ற திட்டங்களுக்குப் பணத்தை செலவழிக்க வேண்டிய நிலையில், 3,000 கோடி ரூபாயில் சிலை அமைத்துள்ளது. இது முற்றிலும் மக்களைப் பைத்தியமாக்கும் செயல். இனிமேல் பிரிட்டன் இந்தியாவுக்கு உதவக்கூடாது” எனக் கடுமையாக சாடியுள்ளார்.