பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதிய மாணவர்களுக்கான அசல் சான்றிதழ் இன்று முதல் பள்ளிகளில் வழங்கப்படும் நிலையில், பள்ளிகளிலேயே அவர்கள் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை ஆணையர் பா.ஜோதி நிர்மலாசாமி திங்கள் கிழமை வெள்ளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“இந்த ஆண்டில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. இதைத்தொடர்ந்து அன்று முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரை 15 நாள்களுக்குள், அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணியை மேற்கொள்ள, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, பள்ளிகல்வித் துறையுடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு , அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகளை மேற்கொள்ளலாம்”. என வெளியிட்டுள்ளார்.