நாடு முழுவதும் 650 அஞ்சலகங்கள், 3,250 கிளைகளில் வங்கி சேவையை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

நாட்டில் உள்ல 1.55 லட்சம் அஞ்சலங்கள் டிசம்பருக்குள் வங்கி சேவையை இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் அஞ்சலக வங்கியில் சேமிப்பு கணக்கு, சில்லறை வணிக பணப் பரிமாற்றங்கள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படும் என்றும்
தெரிவித்தார்

தமிழகத்தில் அஞ்சலக வங்கி சேவையை சென்னையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கும் வங்கி சேவைகள் எளிதாக கிடைப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்

அஞ்சல்துறை மூலம் வழங்கப்படும் அனைத்து சேவைகளுக்கும் இந்த வங்கியின் கணக்கு மூலம் பணமற்ற பரிவர்த்தனை செய்யும் வசதி உள்ளது. வங்கி சேவைக்காக வீடு தேடி வங்கி ஊழியர் வந்து பணம் தரும் வசதி இதன் சிறப்பு அம்சமாகும்.

இதற்காக ஒவ்வொரு முறையும் 25 கட்டணமாக வசூலிக்கப்படும். பாஸ்புக் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை.(QR) க்யூஆர் கோடு கொண்ட அட்டை ஒன்றின் வாயிலாக கணக்கு செயல்படுத்தப்படும்.

மின் கட்டணம், தேர்வு கட்டணம், தொலைபேசி கட்டணம் ஆகியவற்றையும் இதன்மூலம் செலுத்தலாம். நாடு முழுவதும் உள்ள 1.55 லட்சம் அஞ்சலகங்களை இந்தாண்டு இறுதிக்குள் அஞ்சலக வங்கி சேவையுடன் இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் குறைந்தபட்ச இருப்பு தொகை எதுவும் இல்லாமல், ஆதார் எண், செல்போன் எண் ஆகியவற்றை மட்டும் அளித்து கணக்கு தொடங்கலாம்.

ஆனால் ஆதார் எண் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் வந்த நிலையில் ஆதார் எண் தொடரப்பக வழக்கு உச்ச்நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில் ஆதார் எண் கோருவது சரியாக நடைமுறை அல்ல என்கிறார்கள் சட்ட வல்லுனர்கள்